கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?
தாக்குப்பிடித்த புத்தக கடைகள்!
உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம். என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம்.
பாக்தண்டி
புனே
நேகா, விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர். பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா, கிப்ட் வ வுச்சர்கள்தான்.அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர். அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர். ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம். எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ.
விட்டுக்கொடுக்காமல் இருந்தது. புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள்.
ரச்சனா ஸ்டோர்ஸ்
காங்டொக்
ராமன் ஸ்ரேஸ்டா, காங்டொக்கின் புத்தக மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இவர், தனது நூல்களை நேராகவே எடுத்து சென்று விற்பனை செய்த்தோடு வாடிக்கையாளர்களை சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொண்டு விற்றிருக்கிறார். சுயாதீன நூல் விற்பனையாளர் சங்க தலைவரான இவர், ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிரானவர். அந்த அல்காரிதங்கள் கடையில் நூல்கள் அகரவரிசைப்படி அடுக்கப் பட்டிருப்பதை சொல்லுமா என்கிறார். 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கதை பின்னாளில் மூடப்பட்டு 2001இல் மீண்டும் தொடங்கப்பட்டு இன்றுவரை நடந்து வருகிறது.
வாசகர்கள் கடைக்கு வந்து படிப்பதை விழாவாகவே கொண்டாடியிருக்கிறார். பல்வேறு விழாக்களை தனது புத்தக கடையில் நடத்தியிருக்கிறார்.
லிட்டரேட்டி
கோவா
திவ்யகுமார் என்பவர் இந்த கடையை நடத்துகிறார். ஆன்லைன் நிறுவனங்கள் ஏகபோகமாக இருப்பதால் அதனை எதிர்த்து போட்டியிட்டு நூல்களை விற்க வேறுவிதமாக யோசிக்கவேண்டியுள்ளது. எனவே, நீங்கள் அதற்கேற்ப திட்டமிடவேண்டும் என்கிறார். இவர் பொதுமுடக்க காலத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இந்தியா போஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நூல்களை விற்று வந்துள்ளார். தொழில் மீது ஆர்வம், விடாமுயற்சி தேவை, மேலும் நண்பர்களின் ஆதரவைப் பெற்றால் வென்றுவிடலாம் எ்ன்பது இவரின் வெற்றிக்கொள்கை.
அட்ட கலாட்டா
பெங்களூரு
இந்திய எழுத்துகள்தான் இந்த கடையில் சிறப்பு அம்சம், பல்வேறு மொழிகளைச் சார்ந்த நூல்களும் இங்குண்டு. 2012இல் சுபோத் சங்கர், லக்ஷ்மி ஆகியோர் இக்கடையைத் தொடங்கினர். இந்திய இலக்கியங்களில் உள்ள பொக்கிஷ நூல்களை வாசகர்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதுதான் நோக்கம். வாசகர்கள் சொன்ன பல்வேறு பரிந்துரைகளை ஏற்று மேம்படுத்தி நூல் நிலையத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். பொதுமுடக்க காலத்தில்தான் டிஜிட்டலுக்கு நகர்ந்திருக்கிறார்கள். கடையில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்கள். இங்கு நடைபெறும் கவிதை திருவிழா முக்கியமானது.
கிதாப் கானா
மும்பை
2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புத்தக கடை. உயரமான சீலிங், அழகான புத்தக ரேக்குகள் என அலங்காரமான புத்தக கடை. கடந்த ஆண்டு பெரியளவு புத்தக விற்பனை நடைபெறவில்லை. எனவே கடை மூடப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு கடைக்கு பத்தாவது ஆண்டு தினம் வருகிறது. அப்போது மீண்டும் கடையை திறக்கவிருக்கிறார்கள். லண்டன் புத்தக திருவிழாவிலிருந்து நூல்களை பெற்று வருகிறார்கள். நூல்களுக்கு 20 சதவீத தள்ளுபடி உண்டு.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
மேதா தத்தா யாதவ்
கருத்துகள்
கருத்துரையிடுக