இன்ஸ்டன்டாக இயர்பட்ஸ் மூலமே மொழிபெயர்க்க முடியும்! மார்ஸ் இயர்பட்ஸ்

 

 

 

 

Translate in Real Time with Line Corporation's Wireless ...

 

 

 

மொழிபெயர்ப்பு இப்போது ஈஸி


மொழிபெயர்ப்பு செய்வது எப்போதும் பிரச்னைக்குரிய ஒன்றுதான். இன்றுவரையிலும் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடைத்து நூல்கள் தரமாக வெளிவருவது என்பது கடினமாகவே உள்ளது. முன்னணி பதிப்பகங்களில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கூட வேலைப்பளு காரணமாக அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட் வசதியைப் பயன்படுத்தி வேகமாக புத்தகங்களை எழுதி வருகின்றனர். இதனால் என்ன பிரச்னை என்பீர்கள். நூலை தமிழில் படிப்பதற்கு அதனை அர்த்தம கூட குறைய புரிந்தாலும் சரி ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்ளலாம் என பல வாசகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.


இதற்கு விடிவு இல்லையா என்று சிலர் கேட்கலாம். 2018ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி விழாவில் மார்ஸ் இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்தது. நாவர், லைன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. குளோவா ஏஐ முலம் இயர்பட்ஸ் செயல்படுகிறது. இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தி இயக்ககலாம் ஏறத்தாழ அலெக்ஸா, சிரி போலத்தான். சிறப்பு என்னவென்றால், இதனை காதில் பொருத்திக்கொண்டே மொழி தெரியாத இருவர் பேசலாம். சில நொடிகளில் மொழிபெயர்ப்பு நடந்துவிடுவதால், மொழிபெய்ரப்பில் மோசமான பிழைகள் நடக்காது என்று சொல்கிறார்கள்.

எதிர்காலத்தில் நாற்பது மொழிகளை மொழிபெயர்க்கும் என்றாலும் இப்போது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பானிய மொழியில் மட்டுமே மொழிபெயர்ப்பு நடக்கிறது.


ஒருவர் பேசும் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டு ப்ளூடூத் வழியாக போனின் ஆப் வழியாக ஆப்பில் ஏற்றி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மீண்டும் காதில் ஒலிக்கும் என்பதுதான் மொழிபெயர்ப்பு செயல்முறை. பார்க்க நீளமாக இருந்தாலும் சில நொடிகளில் இந்த செயல்கள் நடைபெறும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்