லிஸ்டர் பற்றிய ஐந்து சுவாரசியமான விஷயங்கள்!

 

 

 

ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கிய ஜோசப் ...

 

 

லிஸ்டர் பற்றி ஐந்து விஷயங்கள்!


லிஸ்டரின் அப்பா, தனது பதினான்கு வயதில் பள்ளிக்கல்வியை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தார். பின்னாளில் அவர் உருவாக்கிய நுண்ணோக்கி, அதன் லென்ஸ் ஆகியவற்றுக்காக பணமும் புகழும் பெற்றார்.


லிஸ்டர் ஏராளமான நுட்பமான பல்வேறு கருவிகளை உருவாக்கினார். அதனை புத்திசாலித்தனமாக காப்புரிமை பெற்று வைத்திருந்தார். அறுவை சிகிச்சை செய்த புண்களை தைக்கும் ஊசி, காதில் நுழைந்த பொருட்களை எடுக்கும் கொக்கி போன்ற கருவி, வயிற்றிலுள்ள உறுப்புகளை ஆராயும் கருவி என சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.


லிஸ்டர் உருவாக்கிய ஆன்டிசெப்டிக் முறையை இங்கிலாந்தில் எதிர்த்தாலும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அரவணைத்துக்கொண்டு பயன்படுத்தினர். பிரான்ஸ் ப்ரஸ்ஸியா போர்க்காலங்களில் இம்முறையை பரவலாக பயன்படுத்தினர்.


இன்று மருத்துவர்கள் நோயாளிகளை நம்பர் அல்லது கேஸ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள். ஆனால் லிஸ்டர் இந்த ஏழை மனிதர், இந்த நல்ல பெண்மணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நோயாளிகளை தேற்றியிருக்கிறார். தனது மாணவர்களிடம் நோயாளிகளின் நோ்ய்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லியதோடு, மருத்துவரீதியான வார்த்தைகளை அவர்கள் முன் பேசும்போது பயன்படுத்த வலியறுத்தினார்.


லிஸ்டர் அறுவைசிகிச்சை பற்றி படித்துக்கொண்டிருந்தார். திடீரென மனநிலையில் என்ன மாற்றம் நடந்ததோ மத போதகர் ஆகிவிடலாம் என படிப்பை கைவிட முடிவெடுத்தார். ஆனால் லிஸ்டரின் தந்தை அவரைத் தடுத்து சமாதானப்படுத்தி மீண்டும் படிப்பை தொடர வைத்துள்ளார்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்