சுவாரசியங்கள் நிறைந்த பயணத்தை விவரிக்கும் கடிதங்கள்! - இந்தியப் பயணக் கடிதங்கள் - எலிசா பே, தமிழில் அக்களூர் ரவி

 

 

 

 

 Compass, Map, Nautical, Antique, Navigation, Vintage

 

 

 

 

இந்திய பயணக் கடிதங்கள்


எலிசா பே


அக்களூர் ரவி மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பக வெளியீடு


. 284 விலை. 200


இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த எலிசா பே என்ற பெண்மணியின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது. நூல் முழுக்கவே அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய 31 கடிதங்களாக நீள்கிறது.


1779 முதல் 1815ஆம் ஆண்டு வரையிலான எலிசாவின் கடல் மற்றும் தரைவழிபபயணம்தான் கடிதங்களின் அடிப்படை.


இந்த நூலை எதற்குப் படிக்கிறோம், எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், 1779ஆம் காலகட்ட நிலைமைகள், போர், கப்பலில் அவர் சந்தித்த வினோதமான மனிதர்கள், காட்சிகள், பருவச்சூழல் மாறுபாடு ஆகியவை சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


தன் கணவரோடு இந்தியாவின் கல்கத்தாவிற்கு சென்று வாழவிரும்பியவர், திரும்ப இங்கிலாந்திற்கு வரும்போது அவரது வாழ்க்கை மாறிவிடுகிறது. அவரது கணவர் அவரை விட்டு பிரிந்திருக்கிறார். ஆனால் தன்னை எப்படிப்பட்ட சூழலிலும் பாதுகாத்துக்கொள்ளும் நெஞ்சுரத்தை எலிசா பெற்றுவிடுகிறார். நூலின் இறுதியில் எலிசா எழுதும் எழுத்துகள் இதனை அற்புதமாக பிரதிபலிக்கின்றன.


இந்தியா வரும் அவருக்கு அங்குள்ள கருப்பர், வெள்ளைர், இந்தியர்களுக்குள்ள சாதி வேறுபாடு ஆகியவை புரிபடவில்லை. அதனையும் தனது கடிதத்தில் பதிவு செய்துள்ளார். காலகட்ட வளர்ச்சியை கடிதம்தான் எழுதுகிறார் என்றாலும் அதனை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.


இதில் அவர் கள்ளிக்கோட்டையில் சிக்கிக்கொண்டு பரிதவிக்கும பகுதி, வாசிக்கும் யாரையும் வேதனையில் தள்ளும் உயிரோடு அங்கிருந்து வெளியே செல்வோமா இல்லையா என பயந்துகொண்டு கணவரோடு பயணிகும் காட்சிகள் திகில் திரைப்படம் போல காட்சியாக எழுதப்பட்டுள்ளது.


சுவாரசியமான பயணநூலை வாசிக்க விரும்புபவர்களை நூல் ஏமாற்றாது.


கோமாளிமேடை டீம்

நன்றி


கணியம் சீனிவாசன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்