அமெரிக்க மாப்பிள்ளை போல ஆன டேஞ்சர் டயபாலிக்! - துரோகம் ஒரு தொடர்கதை - முத்து காமிக்ஸ்

 



Danger: Diabolik (1968) -




டேஞ்சர் டயபாலிக்கின் 

துரோகம் ஒரு தொடர்கதை

லயன் முத்து காமிக்ஸ்

ரூ. 50


இக்கதையை டேஞ்சர் டயபாலிக் கலக்கும் என்று கூட சொல்ல முடியாது. கோரா என்ற பெண் மரகத கற்களுக்காக மூன்று ஆண்களை பகடைக்காயாக எப்படி சுழற்றி விளையாடுகிறாள் என்பதுதான் கதை. இதில் டேஞ்சர் டயபாலிக் அமெரிக்க மாப்பிள்ளை போல வந்து போகிறார். அவரையும் அவரது காதலி ஈவா தான் காப்பாற்றும் சூழல் உள்ளது. இந்த லட்சணத்தில் டேஞ்சர் டயபாலிக் இந்த கதைக்கு தேவையா?

அட்ரினோ, ரொடால்டோ, குற்றங்களில் தொடர்புடைய கத்திகளை சேகரிக்கும் மனிதர் என மூவரையும் கோரா என்ற பெண் மரகத கற்களை ஆட்டையைப் போட்டு எப்படி ஏமாற்றி சுற்ற விடுகிறாள் என்பதுதான் பாதிக்கதை. காமத்தால் மூன்று ஆண்களையும் கட்டிப்போட்டு சொகுசாக வாழும் நோக்கம் கோராவுக்கு உண்டு. 

பெண்கள் தினம் வருவதால் இக்கதையை விஜயன் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. ஈவாவும், கோராவும்தான் கதையில் முக்கியமான ட்விஸ்டுகளை செய்கிறார்கள். கதையை நடத்துகிறார்கள். வீட்டிற்குள் புகும் டேஞ்சர் டயபாலிக் சில மணி நேரத்திலேயே காவல்துறையால் பிடிக்கப்படுவது கதையை தொய்வடையச் செய்கிறது. 

கதையை நடத்திச்செல்வது முழுக்க கோரா என்றவுடன் படிப்பதற்கான ஆர்வம் குறைந்துவிடுகிறது. மூன்று மனிதர்களையும் நேரடியாக மறைமுகமாக அவள் நடத்துவது  அவளை முன்னிலைக்கு கொண்டு வருகிறது. இதனால் டேஞ்சர் டயபாலிக் அமெரிக்க மாப்பிள்ளை லெவலுக்கு வந்துவிடுகிறார். கதையை தொடர்ச்சியாக படிக்க சுவாரசியம் இருப்பது முக்கியம். இந்த கதையில் அது இல்லை. 

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துரு சிறியதாக உள்ளது. குற்றத்திருவிழாவில் பயன்படுத்தப்பட்டது போல அழகாக இல்லை. 

கடந்த போன உலக மகளிர் தினத்தை மனதில் கொண்டு காமிக்ஸை படியுங்கள். அதுதான் இந்த காமிக்ஸை வாசிப்பதற்கான ஒரே வழி!

கோமாளிமேடை டீம் 

நன்றி

பாலபாரதி


 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்