வெளிநாட்டு பெண்களை இணைக்கும் கிளப்புகள்! - சமூக, கலாசார உறவுகளை பெண்கள் எப்படி பேணுகிறார்கள்?
பெண்களை இணைக்கும் சமூக கிளப்புகள்
டெல்லியில் வாழும் எழுத்தாளர்கள் நாவலில் பலரும் படித்திருக்கும் விஷயம்தான். மேல்தட்டு வர்க்க குடும்ப பெண்கள் கிளப்புகளில் வந்து உட்கார்ந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த கிளப்புகள் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் பேசுதவதற்கென உருவாக்கப்படுகின்றன. இவற்றில் சேருவதற்கு 4,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இதன் பிரயோஜனம் என்னவென்று சிலர் யோசிக்கலாம். கிராமங்களில் உள்ள கல்லுக்கட்டு, சாவடி எதற்கு கட்டி வைக்கிறார்கள். நாயம் பேசுவதறகும், ஓய்வு எடுப்பதற்கும், மக்கள் ஒன்றாக கூடும் ஓர் இடமாக இருக்கும். அதேதான் இங்கும்.
அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு டெல்லி, மும்பை, சென்னை என திரும்பி வந்துவிட்ட பெண்களுக்கு இங்கு இந்தியர்கள் வாழும் வாழ்க்கை புரிபடாது. வெகு ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு திடீரென வாழ்க்கையை வேரோடு பிடுங்கி கொண்டு வந்து வைத்தால் எப்படியிருக்கும்? கடினமாக இருக்கும். யாரோடும் நம்பி ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. வெளியில் செல்லவே தயக்கமாக இருக்கும். இதற்காகத்தான் அமெரிக்க பெண்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னாளில் அமெரிக்க மனைவிகள் அமைப்பு என பெயர்மாற்றத்தை சந்திதது. இந்த அமைப்பு முழுக்க அமெரிக்காவில் வாழ்ந்து வந்துவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்ட பெண்களுக்கானது.
இங்கு மேல்தட்டு வர்க்க பெண்கள்தான் இருப்பார்கள். கூடுதலாக வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். இவர்களுடன் பீட்டர் இங்கிலீஷ் பேசி, ஜோக்கடித்து சிரித்து வெஜ் உணவகங்களில் நாப்பது பேர் பார்க்க அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். சாட்டர்பாக்ஸ், குயின் பிரிட்ஜ் என பல்வேறு பெண்களுக்கான கிளப்புகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் சேர கட்டணம் உண்டு. புத்தக கிளப்புகளில் மட்டும் சேர காசு கிடையாது.
இவ்வளவு காசு ஆண்டுதோறும் கிளப்புக்காரர்கள் வாங்குகிறார்களே என்று சிலர் நினைக்கலாம். இதற்காக உணவு, ஸ்நாக்ஸ், பல்வேறு வரலாற்று முக்கியத்துவ இடங்களுக்கு செல்வது, பல்வேறு யோகா வகுப்புகள், தியான வகுப்புகள், சமையல் வகுப்புகள் என காசு பிடுங்கும் தனியார் பள்ளிகள் போல பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள். குடும்ப பெண்கள் இதில் அக்கறையாக பங்கேற்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இந்த செயல்பாடுகள் பெண்களுக்கு நிம்மதியை தருகின்றன. அவர்கள் புத்தகங்களைப் படித்து தங்கள் கருத்துகளை சொல்லலாம். வேறு விஷயங்களையும் தோழிகளுடன் பகிர்ந்துகொள்ளலாம். இன்று கொரோனா காரணமாக இந்து வகுப்புகளும் கூட ஆன்லைனுக்கு டிராக் மாறிவிட்டது. இங்கு ஆக மொத்தம் பெணகள் முகமூடிகளை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு பேசுகிறார்கள் என புரிந்துகொள்ளலாம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான லேடீஸ் ஒன்லி ப்ளீஸ் கட்டுரையைத் தழுவியது.
மூலக்கட்டுரை நூர் ஆனந்த் சாவ்லா
கருத்துகள்
கருத்துரையிடுக