பிரியாணி மவுசு பெற்றது எப்படி?
அனைத்து காலங்களிலும் கலக்கும் பிரியாணி!
தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவு என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள்? வேறு சாய்ஸே கிடையாது பிரியாணிதான். அனைத்து தடைகளையும் தாண்டி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. பிரியாணி. எண்ணெய்யில் வறுக்கப்படும் உணவு என்பதுதான் இதற்கான அர்த்தம். இறைச்சி, முட்டை கலந்த பிரியாணி அனைத்து இடங்களிலும் கிடைப்பதோடு, ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கே என்றால் கூட தாக்குப்பிடிக்கும் திருப்தி படுத்தும் உணவாக மாறியுள்ளது.
அடிப்படையில் பிரியாணி என்பது பெர்சியா நாட்டு உணவு. மொகலாயர்களின் இந்திய வருகையின்போது இங்குள்ள மக்களுக்கு இந்த உணவு அறிமுகமாகிறது. பெரு நகரங்களில் சமைக்கப்படும் பிரியாணி, இடத்தைப் பொறுத்து மாறுபடும். மதுரையில் சீரக சம்பா அரிசியில் அதிக கறியுடன் சமைக்கப்படும் பிரியாணி சென்னையில் பாஸ்மதி அரிசியில் பெரும்பாலும் சமைக்கப்படுகிறது. எப்படி அனைத்து மக்களிடமும் பிரியாணி வெற்றி பெற்றது என்றால், கறி, முட்டையுடன் கூடிய சத்தான உணவு. முழு சைவ சாப்பாட்டை விட குறைந்த விலையில் வாங்கி சாப்பிட முடியும். இத்தனைக்கும் தமிழ்நாட்டில் 98 சதவீத மக்கள் அசைவ உணவுப் பிரியர்கள்தான். மேற்கு வங்கத்தில் பிரியாணியில் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுகிறது. ம்லபாரில் அன்னாசிப் பழம் சேர்க்கப்படுகிறது., இதனால் பிரியாணியின் சுவை மாறுபடுகிறது.
இந்த ஆண்டில் ஸ்விக்கி உணவு புள்ளிவிவரங்கள் பட்டியலில் பிரியாணிதான் ஒவ்வொரு நொடியும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி சப்பாத்தி புரோட்டா போல இப்படித்தான் செய்யவேண்டும் என்பது கிடையாது. இதனை உங்களுக்கு ஏற்றபடி சமைத்து பல்வேறு பகுதிப்பொருட்களை சேர்க்கலாம் குறைக்கலா்ம். தேர்தலில் பிரியாணிப் பொட்டலமும், பணமும் மதுபானமும் தவிர்க்க முடியாத பொருட்களாக தொண்டர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
பொதுவாக அன்பை வெளிப்படுத்துவதற்கு உரிய வழி உணவுதான். உங்கள் நண்பர் உங்கள் மீதான அன்பை தனது வீட்டிற்கு வரச்சொல்லலி உணவு தயாரித்து பரிமாறித்தான் வெளிக்காட்டுவார். அந்த உணவுதான் உங்கள் உடலாகிறது உயிராகிறது. சமூக கலாசாரம் சார்ந்த பண்பு. மொய்விருந்து வைத்து அதில் சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு தொகையை இலைக்கு அடியில் வைத்துவிட்டு செல்வார்கள். இதன்மூலம் கடன்பட்டவர்கள் அக்கடனிலிருந்து வெளியே வருவதற்கும் உணவுதான் உதவுகிறது என்றார் சமூக பொருளாதார மானுட ஆய்வாளர் சுமதி.
டைம்ஸ் ஆப் இந்தியா
காமினி மாத்தாய்
கருத்துகள்
கருத்துரையிடுக