பெட்ரோல் பாம்களை வீசி ரஷ்யாவை சாய்த்த பின்லாந்து ராணுவம்! - மோலடோவ் காக்டெய்ல் தெரியுமா?
மோலடோவ் காக்டெய்ல் |
மோலடோவ் காக்டெய்ல்
ஈராக், தாய்லாந்து, பிரான்ஸ், மெக்சிகோ என அனைத்து நாடுகளிலும் இந்த காக்டெய்லை மக்கள் பயன்படுத்துகிறார்கள். உடனே, அந்தளவு புகழ்பெற்ற மதுபானமா என்று கேட்டால் நீங்கள் பெரும் அப்பாவி. மோலடோவ் காக்டெய்ல் என்பது அடுத்தவர்களை கொல்வதற்கென உருவாக்கும் பாம், பெட்ரோல் பாம் என்று கூட சொல்வார்கள்.
தயாரிப்பது எப்படி? அதிக நீளமாக செய்முறை சொல்லமுடியாது. கண்ணாடி பாட்டிலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு மேலே திரியை நீட்டி வைத்து தூக்கி எதிரியின்(போலீசின் மீது) எரியவேண்டியதுதான். இப்படி எறிந்தால்தானே புரட்சி தீ நாடெங்கும் பரவும்.
பெரும்பாலும் புரட்சிக்காரர்கள் இதனை செய்வார்கள். இல்லையெனில் புரட்சியாளர்களை ஏதேனும் காரணம் சொல்லி கைது செய்யவேண்டுமே? அரசு கூட ஆட்களை இப்படி தயார் செய்து அரசு கட்டிடங்கள் மீது ஏற வைக்கலாம். பெட்ரோல் பாம்களை வீச வைக்கலாம்.
டேட்டா
இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் அய்கோ கார்ப்பரேஷன் 4 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மோலடோவ் காக்டெய்லைத் தயாரித்தது.
காக்டெய்ல் திரியை பற்றவைத்த உடனே 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை காக்டெய்லிலுள்ள பெட்ரோல் அடைகிறது.
2015ஆம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள கடை ஒன்றை, இரண்டு மாலடோவ் காக்டெய்ல்களை வீசி அழித்தவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
1930ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் மோலடோவ் காக்டெய்ல் ஆயுதம் கண்டறியப்பட்டது.
1939ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனியும், ரஷ்யாவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி பின்லாந்து ரஷ்யாவில் அதிகாரத்திற்குள் வந்தது. அங்கு மனிதநேய உதவிகள் செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் வியாசெஸ்லாவ் மொலடாவ் சொன்னார். ஆனால், இதனை பிக்னிக் பேஸ்கட் என பலரும் கிண்டலடித்தனர். அப்படித்தான் மோலடோவ் காக்டெய்ல் என்ற பெயர் சிக்கியது.
பின்லாந்து ரஷ்யாவுடனான போரில்(அப்போது சோவியத் ரஷ்யா) 5 லட்சம் மோலடோவ் காக்டெய்ல்களைப் பயன்படுத்தியது. இதனை எப்படி எதிர்கொள்வது என தடுமாறிய ரஷ்யா போரில் தோற்றுப்போனது. இந்த பெட்ரோல் பாம்களை வைத்தே பெரும் ஆயுத வாகனங்களை பின்லாந்து வீ ர ர்கள் எரித்தனர்.
இதே ஐடியாவை அப்படியே சுட்டு அதாவது கலரிங்காக இன்ஸ்பையர் செய்து பிரிட்டிஷ் பயன்படுத்தியது. போலந்து நாட்டினர், கொஞ்சம் வேறுமாதிரி யோசித்து சல்ப்யூரிக் அமிலம், சர்க்கரை, பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை கலந்து வெடிக்க வைத்தனர்.
குவார்ட்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக