உண்மையான காதலைத் தேடும் பயணம்! - காதலை மூழ்கடிக்குமா காமம்?

 

 

 

 

The Graduate (1967)full movie part4/9 - YouTube

கிராஜூவேட்

 

 

 

கிராஜூவேட்

 

Director:Mike Nichols
Produced by:Lawrence Turman
Screenplay by:Calder Willingham, Buck Henry


படத்தின் லைன் சிம்பிள்தான். பென், தனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகிறான். அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது. அவர்களது வீட்டில் அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்லி நண்பரின் மகள் எலைனைப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எலைனின் அம்மாவுக்கு வீடு திரும்பிய பென்னின் உடல் மீது மட்டுமே கண். முதலில் அ்வனை வீட்டுக்கு கூட்டிப்போய் மெல்ல மசிய வைக்கப் பார்க்கிறாள். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.


பென் மிரண்டு போய் திரும்பி பார்க்காமல் வீடு வந்து விடுகிறான். ஆனால் அடுத்தடுத்த ஹோட்டல் சந்திப்புகளில் தினசரி நீச்சல் பயில்வதைப் போல காமமும் கை வந்த கலையாகிவிடுகிறது. ஒரு பெண்ணுடனே தொடர்ச்சியாக காமம் என்றால் போரடிக்குமே? பென்னுக்கும் போரடிக்கிறது. அவனை, நண்பரின் மனைவி பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கிறான். அப்போது, பார்த்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் நண்பரின் மகள் எலைன் வருகிறாள். அவளுக்கு பென்னைப் பார்த்ததும் ஓகே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவன் முதல் சந்திப்பில் செய்யும் விஷயம் அவளை அழ வைக்கிறது. வேறு யோசனைகள் வேண்டாம். கிளுகிளு ஆட்டக்காரி கிளப்புக்கு கூட்டிப்போவது அவளை சங்கடப்படுத்துகிறது.. அவள் அழத் தொடங்க, பென் தான் அவளது அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறி அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுகிறான்.

The Graduate (1967) Desktop Wallpaper | Moviemania

எலைன் என்ன முடிவு எடுத்தாள், வளின் அம்மாவின் தூண்டிலிலிருந்து பென் தப்பி பிழைத்தானா? அவனது முதல் காதல் திருமணத்தில் முடிந்ததா என்பதுதான் கதை.


படத்தில் பென் வேடத்தில் நடித்துள்ளவர் நடிப்பில் அசத்தியுள்ளார். அதேபோல நண்பரின் மனைவியாக வந்து விரகத்தில் தவித்து பென்னை தந்திரமாக கைப்பற்றும் பெண்மணியும் பென்னுக்கு சமதையாக நிற்கிறார்.


படத்தின் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது. குறிப்பாக பென்னின் செக்ஸ் வாழ்க்கை பற்றிய மான்டேஜ் காட்சிகளில் அவர் படுக்கை மீது தாவுவது. இறுதிக்காட்சி.



FILM REVIEW: The Graduate - 50th Anniversary


சுட்டெரிக்கும் காமம்



கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்