மூளைக்கு மாத்திரை போட்டு புத்திசாலியாகும் இளைஞனும், அமெரிக்க அரசியலும்! - லிமிட்லெஸ் - வெப் தொடர்





Limitless (CBS) - Reseña del piloto - Sonia Unleashed




லிமிட்லெஸ்


இருபத்தெட்டு ஆண்டுகள் எதையும் செய்யாமல் கிளப்புகளில் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளைஞனுக்கு நண்பன் மூலம் என்சிடி மாத்திரை கிடைக்கிறது. மூளையின் அனைத்து செல்களையும் உற்சாகப்படுத்தி வேலைவாங்கும் மாத்திரையால் அசாதாரண புத்திசாலியாக மாறும் இளைஞன் வாழ்க்கைதான் கதை.


வெப் தொடர் சீரியசான பிரச்னையை பேசினாலும் இதிலுள்ள காமெடி அனைத்தையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது. தொடரின் தொடக்கத்திலேயே என்சிடி மாத்திரையை பிரையன் பின்சுக்கு கொடுத்த நண்பர் தனது வீட்டில் கொலையாகி கிடக்கிறார். அவரிடம் இன்னொரு மாத்திரை வேண்டும் என கேட்கப்போன பிரையன் சம்பவ இடத்தில் இருக்க அவரைப் போலீஸ் துரத்துகிறது. அதிலிருந்து அவர் மீண்டு ரெபெக்கா ஹாரிஸ் என்ற காவல்துறை அதிகாரி மூலம் எஃப்பிஐயில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்க உதவுகிறான். தொடரில் பிரையன்தான் நாயகன். ஆனால் ஏராளமான பாத்திரங்களை உள்ளே சேர்ந்து போராடிக்காமல் பார்த்துக்கொண்டதோடு, காமெடிக்கான இடமும் தொடரில் அதிகமாக உள்ளது.


ஜேக் மெக்டோர்மன், ஜெனிஃபர் கார்பென்டர், ஹில் கார்பர்,

மேரி எலிசபெத் ஆகியோர்தான் இதில் முக்கியமான கதாபாத்திரங்கள். ஜேக்தான் பிரையன் பின்சாக அசத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்து எக்கச்சக்க எக்ஸ்பிரஷ்சன்களைக் கொடுத்து தொடர் முழுக்க ஆச்சரியப்பட வைத்தவர் ஜெனிஃபர் கார்பென்டர்.


பிரையன், ரெபெக்காவுக்கு இடையிலான உறவு என்பது நண்பர்கள் என்பதைத் தாண்டியது. அதை பல்வேறு காட்சிகளில் நம்மால் உணரமுடியும். தனது பிறந்தநாளுக்கு அலுவலக நண்பர்கள் தரும் அனைத்து அன்பளிப்புகளையு்ம் மறுப்பவர், பிரையனின் தலையில் மாட்டிக்கொண்டு தூங்கும் தலையணையை ஏற்று்க்கொண்டார். பிரையனின் ஐடியாவை அவரும் ஸ்பெல்மன் பாயலும் பின்பற்றிச்சென்று குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பிரையன்தான் அவர்களுக்கு வழக்கில் வழிகாட்டும் பா்ஸ் போலாகிவிடுகிறான். இதனை அவர்களும் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவரை செம்மறியாடு போல வழக்குகளை ஆராய்ந்தவர்களின் வாழ்க்கை, சூப்பர் ஸ்பீடு மோடிற்கு மாறுகிறது.


காவல்துறையில் குற்றங்களை கண்டுபிடிப்பதோடு, என்சிடி மாத்திரை காரணமாகவே மோரா என்ற அரசியல்வாதியின் கையிலும் பிரையன் மாட்டுகிறான். அவர் அவனுக்கு பூஸ்டர் ஷாட் கொடுத்து என்சிடி பக்கவிளைவுகளிலிருந்து காப்பாற்றுவதோடு, சில சட்டவிரோத வேலைகளையும் செய்யவைக்கிறார். இதெல்லாம் நேர்மை, நாணயம் என அக்ரிமெண்ட் போட்டு வேலைசெய்யும் தோழி ரெபெக்காவுக்கு தெரியாமல் நடக்கிறது. அந்த உண்மை தெரியவரும்போது என்னாகிறது? அவரின் ஓவியத்தந்தை எப்படி இறந்துபோனார், மோராவின் பின்னணி என்ன, ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்லும் 22 அத்தியாயங்களைக் கொண்ட தொடர்.


லிமிட்லெஸ் என்ற ஆங்கில திரைப்படத்தின் பெயரில் வெளியாகியுள்ள இத்தொடர் டார்க் ஃபீல்ட்ஸ் என்ற நாவலை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. பிரையனின் பலமாக அவன் பக்கம் ரெபெக்கா, அவரின் பாஸ் நாஷ், பாயல் ஆகியோரை ஈர்க்க வைக்கும் காரணமாக நேர்மையே உள்ளது. என்சிடி மாத்திரைகளைப் பயன்படுத்தும் பலரும் பணம் சம்பாதிக்க பல்வேறு விஷயங்களைச் செய்கிறார்கள். ஏன் பிரையனுக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் மோரா கூட மாறிவிடு என்கிறார். ஆனால் பிரையன் வன்முறை கூடாது, குடும்பம் முக்கியம் என உறுதியாக நிற்கிறான். இது ரெபெக்காவுக்கு பெரிய நம்பிக்கை கொடுக்க பிரையனை நம்புகிறாள்.


என்சிடி ஒருவருக்கு உடல் வலிமை கொடுக்காது. மூளைக்கு வலிமை . உங்களுக்கு எழுதும், படிக்கும், ஓவியம் வரையும் திறமை இருக்கலாம் மாத்திரை சாப்பிட்டால் அத்துறையில் நீங்கள் செய்யும் விஷயங்கள் அசாதாரணமாக இருக்கும். தொடரிலும் அப்படித்தான் நடக்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத ட்விஸ்டுகளும் தொடரில் உள்ளன. பார்க்கத்தொடங்கிவிட்டால் உங்களை கட்டுப்படுத்தவே முடியாது. அந்தளவு உற்சாகமாக தொடரைப் பார்ப்பீர்கள் என்பது உறுதி.


செம புத்திசாலி!


கோமாளிமேடை டீம்







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்