அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?
இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும்!
பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது. யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள். இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும், அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது. இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன. பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம். நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது.
அடிப்படைத் திட்டங்களுக்கும், சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம். கேஸ் சிலிண்டர்களை கூடுதலாக விலையின்றி தருகிறோம் என்பது தேர்தல் வாக்குறுதியாக மாறியிருப்பது மக்களின் தன்மானத்தை சீண்டுவதாகவே உள்ளது. இலவசங்களின் விதை 2006இல் கலைஞரால் விதைக்கப்பட்டது. பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் அரிசியை கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். பிறகு ஆட்சிக்கு வந்ததும் அதன் விலையை ரூ.1 என குறைத்தார். அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியதும் மற்றொரு புரட்சிகரமான நடவடிக்கை. ரேஷனில் அப்போது மத்திய அரசு மாநில அரசுக்கு கிலோ அரிசி ரூ.3.5க்கு வழங்கி வந்தது. இதனை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்தார். ஆனால் அதனை கலைஞர் சாத்தியப்படுத்தினார். இத்திட்டம் சாத்தியம் என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் கூட கூறினார். அன்று திமுகவின் தேர்தல் அறிக்கைதான் நாயகன் என்று கூறப்பட்டது.
எதிர்க்கட்சிகள் எதை சாத்தியமில்லை என்று எதிர்த்தார்களோ ்அதனை அவர்களே பின்பற்றும்படி சூழல் மாறியது. 2011ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த அதிமுக அரசு, ரேஷனில் 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்க ஆணையிட்டது. கூடுதலாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு, மிக்சி, டேபிள் பேன், கிரைண்டர் ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டன. திமுக தன் பங்குக்கு, இலவச கணினியை மாணவர்களுக்கு வழங்கியது.
இப்போதும் கூட இலவச அரசியை இரு கட்சிகளும் இலவசமாக தரப்படுவதை நிறுத்தவில்லை. 2021இல் கூட கூடுதலாக பல்வேறு இலவசப் பொருட்கள் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை பெரியளவு இதனைக் கண்டுகொள்வதில்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களை கொடுப்போம் என பகிரங்கமாக வாக்குறுதி தரும் இரு கட்சிகளி்ன் சின்னங்களை முடக்கவேண்டும். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். 2016இல் இலவசங்களை கொடுப்பதற்காக அரசு 50 ஆயிரம் கோடியை செலவழித்தது. நடப்பு ஆண்டில் வெல்லும் கட்சி 75 ஆயிரம் கோடியை செலவழிக்கும் என்றார் முன்னாள் அரசு பணியாளரான எம்.ஜி தேவசகாயம்.
உச்சநீதிமன்றம் இந்தி விவகாரத்தில் தலையிட்டு கருத்துகளை சொல்லலாம். ஆனால் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை வாக்ககுறுதிகளைத் தடுக்க அதிகாரம் இல்லை. இதுபற்றி மக்களுக்கு அறிவுறுத்தக்கூட தேர்தல் ஆணையம் எந்த முயற்சியையும் செய்யவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் இலவசங்களைப் பற்றி விளக்கம் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற கூறியுள்ளனர். இலவசப் பொருட்கள், சமூக நலத்திட்டங்கள் ஆகிய இரண்டையும் இரு க்ட்சிகளும் குழப்பிக்கொண்டு உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் இலவசமாக பொருட்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர அரசு பள்ளிகளில் மோசமான நிலையிலுள்ள கழிவறைகளை மேம்படுத்துவது, கல்வி கற்கும் வாய்ப்பை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு போதிய கவனம் அளிப்பதில்லை என்கிறார் சென்னை மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த சி லக்ஷ்மணன்.
1967ஆம் ஆண்டு ரூ.1க்கு மூன்று கிலோ அரிசி வழங்கும் என்று கூறி ஆட்சியைப் பிடித்தார். பின்னாளில் அது லட்சியம். ஆனால் நிச்சயமாக ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவோம் என்று ரேஷனில் வழங்கினார். அப்படித்தான் இலவசங்களை வழங்கும் கலாசாரம் தொடங்கியது. இன்று வாஷிங்மெஷின்கள் வரை வந்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா
டி கோவர்தன்
கருத்துகள்
கருத்துரையிடுக