வளர்ச்சியை மட்டும் பேசினால் அசாமில் வெற்றி பெற முடியாது. இன அடையாளத்தை பேச வேண்டியது அவசியம்! - ஹிமான்சு பிஸ்வா சர்மா
ஹிமான்சு பிஸ்வா சர்மா
அசாம் மாநில அமைச்சர், பாஜக
அசாமின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நீங்கள். ஆனால் துறை சார்ந்த சாதனைகளை கைவிட்டு இடம்பெயர்ந்து வந்தவர்கள் பற்றிய பிரச்னைகளை மட்டுமே பிரசாரத்தில் பேசுகிறீர்களே அது ஏன்?
பிரிவினை காலத்திலிருந்து அசாம் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வந்து வாழ்பவர்களின் பிரச்னை உள்ளது. லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய், பிமலா பிரசாத் சலிகா ஆகியோர் இப்பிரச்னையைத் தீர்க்க போராடினர். ஆனாலும் கூட இதற்கு முடிவு கிடைக்ககவில்லை. மேலும் இங்கு முஸலீம்கள் வாழும் பகுதிக்கு சென்றீர்கள் என்றால் அனைத்து அரசு திட்டங்களும் சென்று சேர்ந்திருக்கின்றன என்று அங்கு வாழும் முஸ்லீம்கள் சொல்லுவார்கள். ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்பார்கள். நாங்கள் இதனை மாற்ற நினைக்கிறோம். அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம். அசாமிலுள்ள இந்து, முஸ்லீம்கள், இடம்பெயர்ந்து வந்த முலலீம்கள் என அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம்.
அசாம் மாநிலத்தில் வெறும்மே வளர்ச்சியை மட்டும் பேசினால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது. இங்கு மக்களின் அடையாளம் முக்கியமானதாக உள்ளது. இங்கு தினசரி ஏராளமான மக்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடியேறிவருகிறார்கள்
பாஜக கட்சி தொடர்ச்சியாக பத்ருதீன் அஜ்மல் பற்றியே அதிகம் பேசி வருகிறது?
இவர் தனியாக பெரிதாக பொருட்படுத்தவேண்டியதில்லை ஆனால், அடையாள அரசியலை தீவிரமாக செய்து வருகிறார். இதனால் அவரை நாங்கள் தீமையின் வடிவமாக பார்க்கிறோம். நாங்கள் அவரை தாக்கி பேசுவதற்கான காரணத்தை மக்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். அரசியலில் நாங்கள் அவரை இப்படி எதிர்த்தாலும் தனிப்பட்டமுறையில் நட்புடனே இருக்கிறோ்ம்.
ஆனால் நீங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக இருப்பவர் என்று கூறப்படுகிறதே?
எங்களது அரசியல் கூட்டங்களில் முஸ்லீம்கள்தான் அதிகம் பேர் பங்கேற்கிறார்கள். எங்களது துறையில் அதிகளவு பயன்பெற்றது முஸ்லீம்கள்தான். டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாங்கள் மருத்துவ சிகிச்சையை செய்திருக்கிறோம். நான் வெளிப்படையாக பேசுவதால், என்னை உடனே முஸ்லீம்களுக்கு எதிரானவன் என்று கூறிவிடுகிறார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு மாநில கட்சிகள் குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்களே?
அவர்கள் தேர்தல் காலம் என்பதால் இதனை செய்கிறார்கள். தேர்தல் முடிந்தபிறகு அக்கட்சிகள் காணாமல் போய்விடுவார்கள். கோவிட் -19 க்குப் பிறகு அசாம் மக்கள் கூட குடியுரிமைச் சட்டம் பற்றி ஏதும் கூறவில்லை.
பிரியங்கா காந்தி குடியுரிமைச் சட்டத்தை நீக்குவோம் என்று கூறியுள்ளாரே?
சட்டம் நிறைவேறும்போது அவர் நாடாளுமன்றத்தில்தான் இருந்தார். ஆனால் இப்போது சட்டத்தை நீக்குவோம் என்று கூறியுள்ளார். நாங்கள் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிதான். நாட்டை விட்டு வெளிநாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வங்காள இந்துக்களையும், வங்காள முஸ்லீம்களையும் ஒன்றாக இணைக்க முயன்று வருகிறது. அது வெற்றி பெறாது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
அபிஷேக் சகா
கருத்துகள்
கருத்துரையிடுக