மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை திமுக, காங்கிரஸ் தடுத்துக்கொண்டே இருக்கிறது! - எல்.முருகன், பாஜக
எல்.முருகன்- TOI |
எல். முருகன்
பாஜக தலைவர்
உங்கள் கட்சி சமூக விரோதமான பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதே?
எங்கள் கட்சியில் உறுப்பினராக சேர ஒருவர் மிஸ்டுகால் கொடுத்தாலே போதும். இதன் காரணமாக உறுப்பினர் தவறான காரியங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கள் குற்றத்தொடர்பு கொண்டவர்களோடு பணியாற்றவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை இருந்ததே?
இன்று அந்த விஷயம் மாறியுள்ளது. அதனால்தான் மீனவர்கள், நடிகர்கள் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். வெறுப்பு பிரசாரத்தை திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு செய்துவருகிறார்கள். இனிமேல் இந்த வெறுப்பு பிரசாரம் மக்களிடையே செல்லாது.
எத்தனை தொகுதிகளில் வெல்வோம் என நினைக்கிறீர்கள்?
இருபது தொகுதிகளை வெல்வோம். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக முத்திரை பதிக்கும். வெல்வதைப் பொறுத்து ஆட்சியில் பங்கேற்பதை மேலிடம் முடிவு செய்யும்.
நடக்கவிருக்கும் தமிழக தேர்தலை தேசப்பற்று கொண்டவர்களுக்கும் தேச விரோதிகளுக்குமான போர் என்று கூறியது எதற்காக?
இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொல்ல துணைநின்றது திமுகதான். அப்போது ஆட்சியில் காங்கிரஸ் அரசு இருந்தது. எப்போதெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் நடைபெறுகிறதோ அதனை திமுக தடுத்து வந்திருக்கிறது. நீட் தேர்வு அனுமதியும் அப்படித்தான். விவசாய சட்டங்களில் விலையை காங்கிரசுடன் திமுகவும் சேர்ந்து முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது அதனை பாஜக அமல்படுத்தியபோது எதிர்க்கிறது.
கல்விக்கொள்கையில் திமுக தனது கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தையும் இந்தியையும் கற்றுத்தருகிறது. ஆனால் பிரசாரங்களில் தமிழ்மொழியை மாணவர்கள் கற்கவேண்டும் என்கிறது. 2 ஜி வழக்கில் கூட திமுகவினர் ஊழல் செய்தனர் என்பதை மறக்க முடியாது.
ராகுல் காந்தி மீது எதற்கு புகார் கொடுத்தீர்கள்?
அவர் கல்வி நிறுவனங்களுக்கு சென்று மாணவர்களிடம் மோடி பற்றி எதிர்மறையாக பேசி வருகிறார். மேலும் தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகு அப்படி செய்வது தவறு என்பதற்காக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தோம்.
தி இந்து ஆங்கிலம்
டி.கே. ரோகித்
கருத்துகள்
கருத்துரையிடுக