புதிய மொழிகளைக் கற்றால்தான் கணினி உலகில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்! - பழைய மொழிகளால் ஏற்படும் பாதிப்புகள்
காலாவதியாகி வரும் கணினி மொழிகள்!
கணினி உலகில் ஆயிரக்கணக்கான புதிய புரோகிராமிங் மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதில் அரசு, தனியார் நிறுவனங்களிடையே தயக்கம் நிலவுகிறது.
இன்று உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் அலுவலகம் என்பதைக் கடந்து வீடு நோக்கி நகர்ந்து வருகின்றன. அதேசமயம் கணினி புரோகிராம்கள் எழுதப்படும் மொழி என்பது பெரியளவு மாறுதலுக்கு உட்படவில்லை. கணினி புரோகிராம்களை நாம் மேம்படுத்தாதபோது அரசு அமைப்புகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பிட்ட கணிதங்களை செய்யவும், தகவல்களை உள்ளிடவும் மட்டுமே புரோகிராமிங் மொழிகளை பயன்படுத்தினால் அதில் முன்னேற்றம் காண்பது கடினம். ’’புதிய மொழிகளைக் கற்று செயல்படுத்துவதற்கான இடம் டெக் உலகில் நிறையவே உள்ளது’’ என்கிறார் எம்ஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான பார்பரா லிஸ்கோவ். டெக் நிறுவனங்களில் கூகுள், கோ எனும் புரோகிராமிங் மொழியை மேம்படுத்தி வருகிறது. ஒரு கணினி மொழி பிரபலமாக அதற்கென பயன்பாடுகள்,தேவைகள் உருவாக்கப்படுவது அவசியம்.
1950ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம், போர்ட்ரான் மொழியை வணிகத் தேவைக்காக உருவாக்கியது. இயற்பியல் வல்லுநர்கள் இதனை கணித தேவைக்காகவே அதிகம் பயன்படுத்தினர். 1959ஆம் ஆண்டு வெளியான கோபால், கணினிகளின் புரோகிராம் தேவைகளுக்காக பயன்பட்டு வெற்றிகண்டது.
இன்றும் நிதித்துறை சார்ந்த பரிமாற்றங்களில் கோபால் மொழிதான் பயன்பாட்டில் உள்ளது. ஏடிஎம் பரிமாற்றங்களில் 95 சதவீதமும், வங்கிச்சேவைகளில் 43 சதவீதமும் பயன்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் கோபால் மொழியை கற்றுத்தருவதை நிறுத்திவிட்டன. ஆனாலும் அங்குள்ள நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கோபால் மொழி மூலமே இயக்கப்படுகிறது. இம்மொழியில் உள்ள பிரச்னைகளால் அமெரிக்க வேலைவாய்ப்புத்துறை வழங்கும் நிதி உதவிகள், பத்தில் நான்குபேருக்கு சென்றுசேர்வதில்லை.
பலரும் இன்று கற்காத கணினி மொழிகளில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மின்சாரத்துறை நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்றன. ’’மேம்படுத்தப்படாத காலமாற்றத்திற்கு உட்படாத நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளானால் ஏற்படும் பாதிப்பு பேரிடராகவே இருக்கும்’’ என்கிறார் ஐடி துறைகளின் நிலைமை பற்றிய அறிக்கை தயாரித்துள்ள டெக் வல்லுநர் கரோல் ஹாரிஸ்.
இங்கிலாந்தில் நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் 1970ஆம் ஆண்டு உரு்வாக்கப்பட்ட கணினிமொழிகளில்தான் இயங்கி வருகின்றன. இதனால் இவற்றில் சைபர் தாக்குதல் ஏற்படும்போது தகவல், நிதி கொள்ளையை தடுக்கமுடியாது போகிறது. 2012இல் ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கி, 75 கோடி ரூபாயை செலவழித்து ஐந்து ஆண்டுகள் கால இடைவெளியில் மென்பொருட்களை மேம்படுத்தியது. இதுபோல காலத்திற்கேற்ப கணினி மொழிகளை மேம்படுத்துவது தகவல்கொள்ளையிலிருந்து காப்பதோடு, எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களிலுருந்தும் மக்களைக் காக்கும்.
தகவல்
New scientist
Code red
Ed gent
New scientist 7.11.2020
image pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக