மாடர்ன் பிரெட்டின் கதை! - இந்தியா, சிங்கப்பூர், மெக்சிகோ என மூன்று நாடுகளை சுற்றி வந்த பிரெட்!

 





Modern Bread at Best Price in Bengaluru, Karnataka | Modern Foods Pvt Ltd




இந்திய பிரெட்டின் கதை


மாடர்ன் பிரெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட அதனை ஒருமுறையாவது சாப்பிட்டிருப்பார்கள். அந்தளவு ஏராளமான வெரைட்டிகளில் பிரெட்டையும், பன்களையும் விற்றுவருகிற தனியார் நிறுவனம் அது. 1965ஆம் ஆண்டு மத்திய அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. பின்னாளில் இங்கிலாந்தைச் சேர்ந்த யூனிலீவர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம் என்ற சர்ச்சை இன்றுவரை தீரவில்லை.

மத்திய அரசு தொடங்கி நடத்திய உணவு நிறுவனம், லாபகரமாக இயங்கியது பலருக்கும் ஆச்சரியம்தான். இதனை 2000ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு சுருக்கமாக பாஜக அரசு முதலீடுகளைக் குறைத்துக்கொண்டு தனியார் நிறுவனமான ஹெச்யூஎல்லுக்கு விற்றது. இந்த நிறுவனம், மாடர்ன் பிரெட்டை விரிவாக்கி ஏராளமான புதிய  வெரைட்டிகளை கொண்டு வந்தது. பிறகு, 2016இல் சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான எவர்ஸ்டோன் குளோபலுக்கு விற்றது. 

தற்போது இந்த நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பிரெட் தயாரிப்பு நிறுவனமான குருப்போ பிம்போவுக்கு மாடர்ன் நிறுவனத்தை விற்றுவிட்டது. என்ன விலை என்பது தெரியவில்லை. 

Grupo Bimbo - Wikipedia


குருப்போ பிம்போ நிறுவனம், 2017இல் ஹார்வெஸ்ட் கோல்டு என்ற பிரெட் நிறுவனத்தில் இந்தியாவில் வாங்கியுள்ளது. இந்த நிலையில் 80 ஆயிரம் விற்பனையாளர்களையும், ஏழு உற்பத்தி தொழிற்சாலைகளையும் கொண்டுள்ள மாடர்ன் பிரெட்டை கையகப்படுத்தியுள்ளது. இதன் பிராண்ட் பெயர் மாறுமா என்று தெரியவில்லை. பெயரை மாற்றி விளம்பரம் செய்ய அதிக செலவாகும் என்பதால் குருப்போ பிம்போ அதனை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லாரன்சோ, ராபர்ட்டோ செர்விட்ஜே எனும் இரு சகோதர ர்களால் குருப்போ பிம்போ நிறுவனம் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பேக்கரி தொடங்கப்பட்டு பல்வேறு பிரெட் வகைகளை உருவாக்கத் தொடங்கினர். இவர்களின் பிராண்டிற்கு ஓசிட்டோ பிம்போ என்று பெயர். 

இந்த நிறுவனம் 32 நாடுகளில் 100க்கும் அதிகமான பிராண்டுகளில் பிரெட்டை விற்றுவருகிறது. 


பிஸினஸ் ஸ்டாண்டர்ட்

சிந்து பட்டாச்சார்யா






 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்