பிறர் பேசும் கதைகளை நீங்கள் கேட்டு வெளிப்படுத்துவதில்லை! - சுதாமூர்த்தி, எழுத்தாளர்

 




Behind the Scenes: Illustrating a Sudha Murthy book | Books and Literature  News,The Indian Express



சுதா மூர்த்தி


உங்களுக்கு நிறைய திறமைகள் உண்டு என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகிறோம். குழந்தைகளுக்கான  நூல்களை எழுதுகிறீர்கள். கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். கணினி பற்றியும் எழுதுகிறீர்கள். எப்படி எழுத்தார்வம் பிறந்தது?

இங்கு ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சிண்ட்ரெல்லா, ஸ்னோவொயிட் கதைகளை எழுதுகிறார்கள். அக்கதைகளைத் தான் சொல்லுகிறார்கள். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அந்த கதைகள் நமக்கு பொருந்தாது. நம்முடைய கூட்டு குடும்ப முறை, கலாசாரம், விழாக்கள் ஆகியவற்றுக்கு மேற்கத்திய கதைகள் பொருந்தாதவை. எனவே நான் அதற்கு ஏற்ப இந்திய பண்பாட்டு தன்மை கொண்ட கதைகளை ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன். 

நீங்கள் முதலில் கன்னட மொழியில் எழுத தொடங்கினீர்கள் அல்லவா?

நான் பத்தாவது வரையில் கன்னடப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு 50வயது வயதில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலுள்ள டிஜேஎஸ் ஜார்ஜ் நான் எழுதுவதை பெரிதும் ஊக்குவித்தார். 

கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு எழுத தொடங்கியது கடினமாக இருக்குமே?

உண்மைதான். இதுபற்றி அம்மாவிடம் புலம்பியிருக்கிறேன். கல்லூரியில் ஆங்கில பத்தி ஒன்றை படிக்கவே முடியவில்லை. அம்மா, என்னால் இதனைப் படிக்க முடியவில்லை என்று அழுதேன். அப்போது அவர் கன்னட நூல்களைப் போலவே ஆங்கில நூல்களை வாங்கிப் படி என்றார். வீட்டில் ஆங்கில நாளிதழ்களை வாங்கிப் படித்து இப்போது ஆங்கிலத்தில் எழுதுவது எளிமையாகிவிட்டது. பேனா, தாள் என்றால் கன்னடத்தில் எழுதுவேன். கணினி என்றால் ஆங்கிலத்தில் எழுதுவேன். 

குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தை எழுத்தாளராக இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் முதலில் படித்தது ரீடர்ஸ் டைஜெஸ்ட் பத்திரிகையில் வந்த விம்பிள்டன் போட்டி பற்றித்தான். அதன்பிறகுதான் வாசிப்பில் எனக்கு ஆர்வம் பிறந்தது. வாசிப்பைத் தொடங்குவது கடினம். அதில் மாட்டிக்கொண்டால் உங்களையே நீங்கள் மறந்துவிடுவீர்கள். பெற்றோர் குழந்தைகளை வாசிக்க பழக்கவேண்டும். 

எப்படி உங்களை சந்தித்து பேசுபவர்கள் இந்தளவு மனம் திறந்து பேசுகிறார்கள்?

என்னிடம் பேசுபவர்கள் அனைவரும் பேச்சில் ஆர்வம் கொண்டவர்கள். பயணத்தில் பேசுவதாக வரும் அனைத்துமே உண்மைதான். சில சம்பவங்கள் மட்டுமே எனது வாழ்க்கையில் நடந்தவை. மற்றபடி இப்படி பிறர் பேசுவது இயல்பானதுதான். ஆனால் நீங்கள் அவர்கள் பேசுவதை கேட்டு அதனை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்று சொல்லலாம். 

ரீடர்ஸ் டைஜெஸ்ட்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்