இடுகைகள்

அறிவோம் தெளிவோம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ நிதி ஒதுக்கீடு செலவழிக்கப்படாதது ஏன்?

படம்
அறிவோம் தெளிவோம்! இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் 24-38% மருத்துவ நிதி ஒதுக்கீடு குறைந்துபோயுள்ளது. 2005 ஆம் ஆண்டு தேசிய சுகாதாரத்திட்டம்(NHM) உருவாக்கப்பட்டது. தொலைதூர கிராமங்களில் சுகாதார திட்டங்களை வலுவாக்க மாநில அரசுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, செலவழிக்கப்படவில்லை என்கிறது சிஏஜி அறிக்கை. 24 மாநிலங்களில் விட்டமின் ஏ, கருத்தடை மாத்திரைகள், உப்பு-சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை சரியாக கிடைப்பதில்லை. துணை சுகாதார நிலையங்களில் 28 சதவிகிதத்தை கிராமத்தினர் அணுக முடியாத சூழலிலும், இதில் 17 சதவிகிதம் தூய்மையற்ற சூழலிலும் உள்ளன. பீகார், ஜார்க்கண்ட், சிக்கிம், உத்தர்காண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 சதவிகித தட்டுப்பாட்டு உள்ளது. இதில் பீகாரில் உச்சமாக 92% பற்றாக்குறை உள்ளது. ரத்தஅழுத்தமானி, தெர்மாமீட்டர், பிரசவ பொருட்கள், எடைமெஷின், பாரசிட்டமால், நாடாப்புழு ஒழிப்பு, இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை சுகாதார நிலையங்களில் ஆஷா பணியாளர் அவசியம் வைத்திருக்கவேண்டியவை. பீகார், சத்தீஸ்கர் கேரளா உள்ளிட்ட பத்து மா

சூயிங்கம்மில் உள்ள பொருட்கள் என்ன அறிவீர்களா?

படம்
சூயிங்கம்மில் என்ன இருக்கிறது ? விளையாட்டில் ஆட்டக்காரரோ பொதுமேடைப்பேச்சுக்கு பார்வையாளரோ எந்த பாத்திரம் வகித்தாலும் நம்மில் பலருக்கும் வாய் நமநம என்றிருக்கும் வேளையில் உதவுவதுதான் சூயிங்கம் . பூமர் , டபுள்மின்ட் , சென்டர்ப்ரெஷ் வரை வாங்கிப்போட்டு சாப்பிடுவதுதான் நமது பழக்கம் . ஆனால் அதில் என்னென்ன இருக்கிறது ? பிளாஸ்டிக்கை கொண்டுள்ள சூயிங்கம்மை  விழுங்கினால் ஜீரணமாகாது என்பதோடு எளிதில் மட்கும் தன்மை அறவே கிடையாது . இதன் டெக்சருக்கு கால்சியம் கார்பனேட் அல்லது மெக்னீசியம் சிலிகேட் பயன்படுகிறது .  இரண்டாம் உலகப்போரின்போது இதில் பயன்படுத்தப்பட எலாஸ்டோமர்ஸ் ( பாலிவினைல் அசிடேட் ) சபோடில்லா மரத்திலிருந்து பெறப்பட்டது . சூயிங்கம்மின் மின்ட் , ஸ்டாபெர்ரி வாசனையையும் நிறத்தையும் தக்க வைக்கவும் வாயில் ஒட்டிக்கொள்ளாமல் மெல்லவும்  எமுல்சிஃபையர்ஸ் உதவுகிறது . கல் போன்றிருந்தால் எப்படி மெல்லுவது அதற்காகத்தான் வெஜிடபிள் எண்ணெய் மற்று்ம லெசிதின் ஆகியவை சேர்க்கப்பட்டு சூயிங்கத்தின் ரேப்பர் சுற்றப்படுகிறது . 

சிறப்பு அந்தஸ்து எதற்கு?

படம்
அறிவோம் தெளிவோம் ! சிறப்பு அந்தஸ்து எதற்கு ? நாட்டில் வரலாற்றுரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்குகிறது . தேசிய மேம்பாட்டு கவுன்சில் இதற்கான பொறுப்பை ஏற்கிறது . மாநிலத்தின் பொருளாதாரம் , நிலப்பரப்பு , அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவை இதில் முக்கிய அம்சங்கள் . இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் முதல் மாநிலமாகவும் , 2010 ஆண்டு உத்தரகாண்ட் கடைசி மாநிலமாகவும் சிறப்பு அந்தஸ்து பட்டியலில் இணைந்தன . பயன்கள் என்ன ? மாநிலத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் 90% சதவிகித நிதியுதவி கிடைக்கும் . மாநில அரசுக்கு பத்து சதவிகிதம் நிதியளித்தால் போதுமானது . இதோடு வரி , வட்டி , கிஸ்தி என அனைத்தையும் குறைத்து அல்லது முற்றாக விலக்கி பிற மாநிலங்களைவிட எளிதாக தொழில்துறையை ஈர்க்கமுடியும் . ஆந்திரா எதற்கு சிறப்பு அந்தஸ்து ? 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசம் , சீமாந்திரா - தெலுங்கானா என பிரிந்ததால் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு சொந்தமாகிவிட்டது . எனவே சீமாந்திராவை முன்னேற்ற சிறப்பு அந்தஸ்து தேவை என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார் . மேலும்