சூயிங்கம்மில் உள்ள பொருட்கள் என்ன அறிவீர்களா?
சூயிங்கம்மில்
என்ன இருக்கிறது?
விளையாட்டில் ஆட்டக்காரரோ
பொதுமேடைப்பேச்சுக்கு பார்வையாளரோ எந்த பாத்திரம் வகித்தாலும் நம்மில் பலருக்கும் வாய்
நமநம என்றிருக்கும் வேளையில் உதவுவதுதான் சூயிங்கம். பூமர், டபுள்மின்ட், சென்டர்ப்ரெஷ் வரை வாங்கிப்போட்டு சாப்பிடுவதுதான்
நமது பழக்கம். ஆனால் அதில் என்னென்ன இருக்கிறது?
பிளாஸ்டிக்கை கொண்டுள்ள
சூயிங்கம்மை விழுங்கினால் ஜீரணமாகாது என்பதோடு
எளிதில் மட்கும் தன்மை அறவே கிடையாது. இதன் டெக்சருக்கு கால்சியம் கார்பனேட்
அல்லது மெக்னீசியம் சிலிகேட் பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது இதில் பயன்படுத்தப்பட எலாஸ்டோமர்ஸ்(பாலிவினைல் அசிடேட்) சபோடில்லா மரத்திலிருந்து பெறப்பட்டது.
சூயிங்கம்மின் மின்ட், ஸ்டாபெர்ரி வாசனையையும்
நிறத்தையும் தக்க வைக்கவும் வாயில் ஒட்டிக்கொள்ளாமல் மெல்லவும் எமுல்சிஃபையர்ஸ் உதவுகிறது. கல் போன்றிருந்தால் எப்படி மெல்லுவது அதற்காகத்தான் வெஜிடபிள் எண்ணெய் மற்று்ம
லெசிதின் ஆகியவை சேர்க்கப்பட்டு சூயிங்கத்தின் ரேப்பர் சுற்றப்படுகிறது.