சிவப்பு கார்பெட்!
சிவப்பு கார்பெட்
மரியாதை!
1922 ஆம்
ஆண்டு அக்டோபர் 22 தேதி, ராபின்ஹூட் என்ற
படத்தை எகிப்தில் திரையிட்டனர். தியேட்டர் ஓனர் சிட் கிராவ்மன்
படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு சிவப்பு கார்பெட்டை பயன்படுத்தி டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸை
வரவேற்றார். கிராவ்மனின் கார்பெட் நிறம் அப்படியே காப்பியடிக்கப்பட்டு
பிற தியேட்டர்களிலும் பயன்படுத்தப்பட்டது.
1961 முதல் அகாடமி விருது விழாக்கள்
மெல்ல மக்களின் கவனம் பெற்று டிவிக்களில் ஒளிப்பரப்பாக, நடிகைகள்,
உடைகள் என்று கார்பெட்டும் கவனம் பெற 1966 ஆம்
ஆண்டு அதன் நிறம் முற்றுமாக சிவப்பாக மாறியது.
சிவப்பு கார்பெட்
என்பது செல்வம்,
அதிகாரம் அந்தஸது என்ற வடிவில் கி.மு.
458 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ஏமி ஆண்டர்சன்
தகவல் தெரிவிக்கிறார். இன்று சிவப்பு கம்பள வரவேற்பு என்பது முந்தைய
காலத்தைவிட புகழ்பெற்றதாக வரவேற்புக்குரியமாக மாறியுள்ளது. 50 ஆயிரம் சதுர அடியில் 900 அடி நீளமாகவும் 33 அடி அகலத்திலும் தயாரிக்கப்பட்டு பிரபலங்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
2
கருணைக்கொலைக்கு
அங்கீகாரம்!
சமய நம்பிக்கைப்படி
ஒருவர் இறப்பை தேர்ந்தெடுப்பது அனுமதிக்கப்படாத இந்தியாவில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள
கருணைக்கொலை தீர்ப்பு புதுமைதான்.
மூளை செயல்பாடுகளற்ற
நிலையில் உள்ளவரை பராமரிப்பு நடுத்தவர்க்க, வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு
பெரும் சுமை என்பதால் சிகிச்சையை நிறுத்திவிடுவது இந்தியாவில் நடைபெற்றுவருகிற ஒன்று.
"புற்றுநோய், எய்ட்ஸ், நீரிழிவு, மனநலக்குறைபாடு ஆகியவை குணமாக்க முடியாதவை" என்கிறார் மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தின்(NIMHANS) மருத்துவரான சுரேஷ். அதேசமயம் அரசு உயிர்க்கொல்லி நோய்களுக்கும்
சரியான சிகிச்சையை மருத்துவமனைகளில் வழங்கினால் யார் இறக்க விரும்புவார்கள்?
என்ற முணுமுணுப்புகளும் எழுந்துள்ளன. இறப்பை எதிர்நோக்கும்
நிலையில் பேலியேட்டிவ் கேர் எனும் வலியைக் குறைக்கும் சிகிச்சைகள் இதில் பெருமளவு கருணைக்கொலையை
குறைக்க உதவலாம். இந்நிலையை கடந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரை
பெற்று நோயாளிகள் கௌரவமான மரணத்தை தேர்ந்தெடுக்க முடியும். இம்முடிவை
நீதிமன்றம் எடுக்க பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி 42 ஆண்டுகள்
சுயநினைவற்று கிடந்து இறந்த அருணா ஷான்பாக் என்ற நர்சும் முக்கிய காரணம்.
4
உங்கள் இதயம் நலமா?
இன்றைக்கு வரும்
அனைத்து ஸ்மார்ட் போன்களிலும், ஆப்ஸ்களிலும் இதயத்துடிப்பை கண்டறிவதற்கான வசதிகள்
வந்துவிட்டன. உடம்பில் எத்தனையோ பாகங்கள் இருக்க ஏன் இதயத்திற்கு
மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?
பெரும்பாலானோர்க்கு
மரணம் இதயநோய்களால் ஏற்படுகிறது என உலகசுகாதார நிறுவனம் எச்சரித்ததால் சுதாரித்த டெக்
நிறுவனங்கள் தற்போது இதயத்தை காக்க புறப்பட்டுள்ளன. ஆப்பிளின் வாட்ச் இதற்கு
ஒரு உதாரணம். பொதுவாக இக்கருவிகள் இதயம் துடிக்கும் ரிதத்தில்
மாறுபாடு ஏற்பட்டால் உடனே எச்சரித்து மருத்துவசிகிச்சைக்கு உதவுகின்றன.
"இதயத்தின் துடிப்பில் மாறுதல் ஏற்பட்டால் வாதம் ஏற்படும் வாய்ப்பு
அதிகம்" என பகீர் தகவல் தருகிறார் ட்யூக் பல்கலையைச் சேர்ந்த
மருத்துவ பேராசிரியர் எரிக் பீட்டர்ஸன். ஆப்பிள் வாட்ச் ஆப்பான
கார்டியோகிராம், இதயத்துடிப்பு தொடர்பான டிப்ஸ்கள் மற்றும் முடிவுகளை
அறிய ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.
அதேசமயம் நாடித்துடிப்பு
சரியாக இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டால் அவற்றை இச்சாதனங்கள் கண்டுபிடிக்க எந்த
கேரண்டியும் இல்லை.
உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம்,
சிறுநீரக குறைபாடுகள் ஆகியவற்றில் ரத்த அழுத்தத்தை கணக்கிடுவது சுலபமல்ல.
பணியைப் பொறுத்து ரத்த அழுத்தத்தின் அளவு மாறும். எக்ஸாம், டெட்லைன் வேலைகள், ஒரே
நேரத்தில் தசாவதானியாக பல்வேறு வேலைகளை செய்வது ஆகியவை இதற்கு காரணம்."ரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடுவதற்கான சென்சார்கள் இன்னும் போன்களில்
வரவில்லை" என்கிறார் குழந்தைகள் இதயநல வல்லுநரான ப்ரூஸ்
ஆல்பர்ட். 3டி பிரிண்ட் ஸ்மார்ட்போன்களிலுள்ள ஃபிங்கர்பிரிண்ட்
ஸ்கேனர்களில் ரத்த அழுத்தத்தை கணிக்கலாம். ஆனால் முடிவுகள் அவ்வளவு
துல்லியமில்லை. பத்தில் எட்டு நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் தவறிப்போனது.
மருத்துவமனைகளில் சேரில் உட்காரவைத்து இதயத்துக்கு சமநிலையில் கைகளை
நீட்டி ரத்த அழுத்தத்தை அளப்பார்கள். இதுவும் மோனோரயிலை பிடிக்க
ஓடும்போது எடுக்கும் அளவுகளும் எப்படி துல்லியமாக இருக்கும்?
நீரிழிவை கண்டறிவதிலும்
ரத்தத்தை சோதிக்காமல் கூகுளின் லென்ஸ், சென்சார் மூலம் கண்டறிவதிலும் துல்லியம்
கிடைக்காது. ஏனெனில் குளுக்கோஸை எளிதாக கருவிகளால் கண்டறிய முடியாது.
ரத்தத்தை வேதிப்பொருளை பயன்படுத்தி சர்க்கரையை கண்டறிவது எளிதான ஒன்று.
ஆப்பிளின் கார்டியாபேண்ட்டை எஃப்டிஏ அங்கீகரிக்கவில்லையென்றாலும் நிறுவனம்
ரத்தத்திலுள்ள பொட்டாசிய அளவை திறம்பட கண்டறிகிறது என கூறுகிறது. அங்கீகாரம் பெற்ற
பொருட்களை வாங்கி உடல்நலனை காப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.
5
ஆபல் பரிசு 2018!
உலகெங்குமுள்ள
கணித ஆசிரியர்களை கௌரவிக்கும் ஆபல் பரிசு கனடாவைச் சேர்ந்த கணித ஆசிரியர் ராபர்ட் லாங்லேண்ட்ஸூக்கு
வழங்கப்படவிருக்கிறது.
ராபர்ட்டின் 'grand
unified theory of mathematics' என்ற கண்டுபிடிப்பை கௌரவிக்கும் விதமாக
இவ்வாண்டிற்கான ஆபல் பரிசை Norwegian Academy of Science and Letters அமைப்பு வழங்குகிறது.
கணித தியரியை ராபர்ட்
எழுதி ஐம்பதாண்டுகளுக்கு பிறகு அவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கனடாவில்
நியூ வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் 1936 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட்,
நம்பர் தியரி, ரெப்ரசென்டேஷன் தியரி ஆகியவற்றை
தீர்க்கமாக ஆராய்ந்தவர். பிரிட்டிஷ் கொலம்பியா யேல் பல்கலையில்
கல்வி கற்றார். லாங்லேண்ட்ஸ் எனும் கணித ஆராய்ச்சியால் பெரும்
புகழ்பெற்றவர் மூன்றுக்கும் மேற்பட்ட கணித நூல்களை எழுதியுள்ளார்.
"கணிதத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை
சாதாரணமாக நண்பர்களுடன் விவாதித்த பெறமுடியாது என விரைவில் கண்டுகொண்டேன்"
என்று கூறும் ராபர்ட், மேற்சொன்ன தியரியை எழுத்து
வடிவில் எழுதியபோது அவருக்கு வயது 30.
மே மாதம் ஆஸ்லோ
நகரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் நார்வே அரசர் ஐந்தாம் ஹெரால்ட் ஆபல் பரிசை
ஆசிரியர்களுக்கு வழங்குவார். "எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆபல் பரிசைப்
பற்றி என்ன கூறுவது என்று தெரியவில்லை. எனக்கு சிறிது நேரம் கொடுங்கள்.
யோசிக்கிறேன்" என்கிறார் இந்த 81 வயது கணித ஆசிரியர்.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்