இது கேரளா பெருமை!
மாணவர்களுக்கு
ஜாதி வேண்டாம்!
அரசு பள்ளிகளில்
ஜாதி, மதம் குறிப்பிடாமல் மாணவர்களை சேர்த்து கேரள அரசு சாதனை செய்துள்ளது.
இவ்வாண்டில் மட்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் மாணவ,
மாணவிகள் தம் சான்றிதழில் ஜாதி, மதம் குறிப்பிடாமல்
கல்வி கற்கவுள்ளனர் என்பது பெருமைப்படத்தக்க நிகழ்வு.
கேரளாவின் சட்டசபையில்
கல்வி அமைச்சர் ரவிச்சந்திரநாத், 2017-2018 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பிலிருந்து
பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் இணைந்த மாணவர்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 630 பேரும், பதினொன்றாம்
வகுப்பில் 278 பேரும், பனிரெண்டாம் வகுப்பில்
239 பேரும் ஜாதி, மதம் குறிப்பிடாமல் கல்வி கற்கவுள்ளனர்
என தகவல் தெரிவித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். "மதச்சார்பற்ற கேரள சமூகத்தைப்பற்றி பலரும் அறிய இது ஒரு வாய்ப்பு"
என பெருமிதமாக பேசுகிறார் அமைச்சர் ரவீந்திரநாத். காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம், கம்யூனிஸ்ட் எம்பி ராஜேஷ்
ஆகியோரும் இதைப்போன்ற மதச்சார்பற்ற நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர்.
கடவுளின் தேசத்திலிருந்து கற்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.