வாக்கியப்பிழையை திருத்திக்கொள்வது எப்படி?-தமிழ்வலம்
தமிழ்வலம் -
இளங்கோ
சென்றவாரம் கேட்ட கேள்வி:
அது ஓர் அழகிய கிராமம்
ராமன் என்றோர் மானுடன்
’இந்த இரண்டு வாக்கியங்களில் எதுசரி எதுதவறு?’ என்று கேட்டிருந்தோம். உண்மையில் இந்த வாக்கியங்களின் கருத்திலும் எந்தப்பிழையும் இல்லை. ஆனால், எழுத்தில் பிழையுள்ளது. தமிழில்
எந்த இடத்தில் ’ஒரு’ என்றசொல்லைப் பயன்படுத்த வேண்டும். எந்த இடத்தில் ‘ஓர்’ என்ற சொல்லைப்
பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விதிமுறை உள்ளது.
பொதுவாக, உயிர் எழுத்துகளில்
தொடங்கும் ஒருமைச்சொற்கள் வரும்போது ’ஓர்’ என்ற சொல்லைப்
பயன்படுத்துவார்கள். ஓர் அரசன், ஓர் ஆடு, ஓர் இலை போன்றவை உதாரணங்கள். உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச் சொற்களுக்கு ’ஒரு’ என்ற சொல்லைப்
பயன்படுத்துவார்கள். எ.கா: ஒருநாடு, ஒருவிலங்கு.
’அது ஓர் அழகியகிராமம்‘ என்பதுசரி. அதுபோலவே’ராமன்என்று ஒரு மானுடன்’ என்பதே சரி.