வணிகத்திலும் சூழல் காப்பாற்றும் சூழலியலாளர்!









தலைவன் இவன் ஒருவன்

ஆன்டனி டோரஸ்

பகதூர் ராம்ஸி


அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆன்டனி டோரஸ், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான தன்னார்வலர். நிகரகுவாலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த பெற்றோர் மூலம் வறுமை, வெப்பநிலை உயர்வினால் கடல்நீர் மட்டம் உயர்தல் ஆகியவை ஒன்றிணைந்த ஒரே தீர்வினை எதிர்நோக்கும் பிரச்னைகளை என்பதை விரைவிலேய அடையாளம் கண்டு கொண்டார் ஆன்டனி. சியரா கிளப் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இனக்குழு சார்பாக பல்வேறு பேரணிகளை நடத்தி அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர்.

 "சூழல் செயல்பாட்டாளர்கள் தம் பிரச்னைகளை எளிய கதைகளாக்கி மக்களுக்கு புரியும்படி விளக்குவது அவசியம். தடுமாறாத லட்சியமும் நோக்கமும் இச்செயல்பாட்டுக்கு தேவை" என்கிறார் ஆன்டனி. அனைத்து பிரச்னைகளிலும் வர்க்கம், பாலினம், நிறம் ஆகியவை அமெரிக்காவில் இணைந்தே நிற்கின்றன என்பதை ஆன்டனி உணர்ந்துள்ளார். சியரா கிளப்பின் வழியே வணிகத்தில் மக்கள், ஊழியர்கள், சுற்றுச்சூழல் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க போராடி வருகின்றனர். 1892 ஆம் ஆண்டு சூழலியலாளர் ஜான் ம்யூர் என்பவரால் தொடங்கப்பட்ட முக்கியமான சூழல் அமைப்பு சியரா கிளப். இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 250 மில்லியன் நிலத்தை சூழல் கேட்டிலிருந்து காப்பாற்றி பாதுகாத்துள்ளனர்.

பாபிலோன் தீவில் தன் கிளப் நண்பர்களுடன் ரோ்ந்து சென்று அரிய உயிரிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்த இருபத்தி மூன்று வயது இளைஞர். "அடிக்கடி ரோந்து சென்று கடல் உயிரிகளை பாதுகாத்து, கழிவுகளை அகற்றி வருகிறோம்." என்கிறார் ஆன்டனி. 2012 ஆம் ஆண்டு கடல்பகுதியை சாண்டி புயல் தாக்கியபோதும் இங்கு பாதிப்பை சீர்செய்யும் முயற்சியில் தன் குழுவினருடன் ஈடுபட்டவர்  Brower Youth Award பட்டியலில் இடம்பெற்ற ஆச்சரிய இளைஞர்.

"பசிஃபிக், நாஃப்டா ஒப்பந்தம் என எந்த வணிக நடவடிக்கை என்றாலும் அதில் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான விதிகள் இருப்பது அவசியம். வணிகம் இயற்கை வளங்களை சூறையாடும்போது பாதிக்கப்படுவது நிற,வர்க்க பேதங்களைத்தாண்டிய மக்கள் மட்டுமே என்பதை நாம் உணரவேண்டும். அரசியல் அதிகாரம் நமக்கு சாதகமாக இருந்தால் மாற்றம் சாத்தியம்தான்" என திருத்தமாக பேசி அதிரவைக்கிறார் ஆன்டனி