சிக்ஸ்பேக்குக்காக சிரத்தை!




Image result for rowan atkinson




ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தை!

ஜீன்ஸ் அணிந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது வரை டாக்டர்கள் டிப்ஸ் சொல்லிவிட்டார்கள். ஆனால் கேரளாவைச் சேர்ந்த ரஜீத்குமார் பேசியது போல உலகில்  யாருமே யோசிக்கவே முடியாது. அப்படியொரு அதிரடி அறிவியல் பேச்சு!

கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஜீத்குமார், காசர்கோட்டில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் "ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு திருநங்கை குழந்தைகள் பிறக்கும் என்று பேசியதோடு, நடத்தை சரியில்லாத பெற்றோர்களுக்கு ஆட்டிசம் மற்றும் செரிபெரல் பால்சி பாதிப்பு கொண்ட குழந்தைகள் பிறக்கும்" என்று யோசிக்காமலேயே பேசி மக்களுக்கு செம ஷாக் கொடுத்தார். மக்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சி; ரஜீத்குமாருக்கு இது இயல்பான பழகிய பேச்சுதான். முன்பு இதுபோல திருவனந்தபுரத்தில் பெண்கள் கல்லூரியில் தன் பரிசுத்த கலாசாரக் கருத்துக்களை எடுத்துக்கூற அந்த இடமே பெண் மாணவிகளின் போராட்டத்தால் களேபரமானது.
ne'> 

2


கல்யாணக்கொலை!

கொலைகள் நடக்க இதுதான் காரணம் என்று இன்று சொன்னால் பலராலும் நம்பவே முடியாது.  அப்படித்தான் ஜார்க்கண்டில் ஒரு குடும்பமே கொல்லப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் சிங்பம் மாவட்டத்தில் ராம்சிங் சிர்க்கா என்பவர் தன் மனைவி, இருமகன்கள் ,மகளுடன் வாழ்ந்து வந்தார். அவரின் பதினேழு வயது மகள் ரம்பாவை திருமணம் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனவே மணமானதால் மறுத்த ராம்சிங் சிர்க்காவுடன் கடும் கோபத்துடன் வாதிட்ட வாலிபர், ராம்சிங் வேலைக்கு சென்றபின் அவரது வீட்டுக்கு வந்து மனைவி, இருமகன்கள், மகள் ஆகியோரை இரும்பு தடியால் தாக்கி கொன்று காட்டுக்குள் எறிந்த சைக்கோ வாலிபர், தனக்கு அனுமதி மறுத்த ராம்சிங்கையும் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார். இப்படுகொலையில் ஈடுபட்டுள்ள ஒன்பது பேர்களையும் காவல்துறை கச்சிதமாக கைது செய்துள்ளது. கல்யாணத்திற்காகவா இவ்வளவு ரத்தம்?

3


சிக்ஸ்பேக் ராணி!

போபாலைச் சேர்ந்த டெக் பெண் பிரியங்கா வைஸ்யா, தன் சிக்ஸ் பேக் கனவுக்காக கணினியை கைவிட்டு புல்அப்ஸ் பாரைப் பிடித்து பட்டம் வென்றிருக்கிறார்.

போபாலைச் சேர்ந்த பிரியங்கா தன் இருபத்தைந்து வயதில் பெங்களூரை விட்டு சொந்த ஊர் திரும்பினார். தன் சிக்ஸ்பேக் உடல் கனவை நிறைவேற்றத்தான் என்றபோது நண்பர்கள் உறவுகள் என பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் இன்று ஸ்ட்ராங்மேன் ஆஃப் இந்தியா(2017,2018) விருதை இருமுறை வென்று சாதித்திருக்கிறார் "கொஞ்சம் கிறுக்குத்தனமான ஐடியாதான். ஆனால் வித்தியாசமான விஷயங்கள் செய்வதை விரும்புபவள் நான்" என்பவர் தற்போது போபாலிலுள்ள பிட்னெஸ் கிளப்பின் பயிற்சியாளர். உலகளவில் 44 ஆவது இடம் வகிப்பவர் முப்பதிற்குள் தன் பெயர் வர வியர்வை வழிய உழைத்துக்கொண்டிருக்கிறார்.






பிரபலமான இடுகைகள்