கி.மீ, மைல் எப்படி உருவானது தெரியுமா?
அளவுகளின் வரலாறு!
மைல்
ரோமனில் உருவானதே மைல் அளவு. 1592 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஒரு
மைல் என்பது எட்டு பர்லாங்குகள் என வரையறை செய்தது. ஒரு பர்லாங்
என்பது 660 தப்படி. இப்படித்தான்
5,280 அடிகள் ஒரு மைல் என கணக்கிடப்பட்டது.
ஏக்கர்
இங்கிலாந்தில்
ஒருநாளில் காளை உழும் நிலத்தின் அளவு என்று குறிப்பட்டு புழங்கிவருகிறது. 43 ஆயிரத்து
650 சதுர அடி என்பது ஒரு ஏக்கர் என இன்றுவரை கணக்கிடப்பட்டு வருகிறது.
காலன்
ரோமன் மொழி வார்த்தையான galeta என்பதிலிருந்து காலன் என்பது உருவானது. 1707 ஆம் ஆண்டிலிருந்து
காலன் என்ற அளவு அமெரிக்காவில் புழக்கத்திலிருந்து வருகிறது. எட்டு ட்ராய் பவுண்டு எடையிலான வைன்களை அளக்க காலன் அளவு பயன்படுகிறது.
பவுண்டு
ரோம வார்த்தையான libra(lb) என்பதிலிருந்து உருவான பவுண்டு(லத்தீனில்
pondo) உருவானது. 14 ஆம் நூற்றாண்டில் பவுண்டு
என்ற அளவீடு புழக்கத்திலுள்ளது.