கிறிஸ்டோபர் நோலனும், மஜித் மஜீதியும்!
லோகோ: கார்டூன் கதிர் |
ஒருபடம் ஒரு ஆளுமை!- லிஜி
தி பிரஸ்டீஜ்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில்
வெளியான வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட படம் ‘தி பிரஸ்டீஜ்’.பிரபு வர்க்க
மேஜிக் மேனுக்கும், எளிய குடும்பத்தைச் சேர்ந்த மேஜிக் மேனுக்கும் இடையிலான பகைமையும், இழப்புகளும்தான்
படத்தின் கதை.
ஒரு கூண்டுக்குள்
அழகான பறவை ஒன்று இருக்கும். மேஜிக் மேன் அந்தக் கூண்டை துணியைக் கொண்டு மூடுவார். சிறிது நேரத்தில்
அந்த துணியை மேலே எடுப்பார். அப்போது அந்த கூண்டும், பறவையும்
காணாமல் போயிருக்கும். உடனே பார்வையாளர்கள் மேஜிக்மேன் தான் தன்னுடைய மாய சக்தியால்
கூண்டையும் பறவையையும் மறைய வைத்துவிட்டான் என்று ஆச்சர்யத்தில் கை தட்டுவார்கள் .ஆனால், அச்சிறுவனோ ‘‘அவன் பறவையைக்
கொன்று விட்டான்...’’ என்று அழுதுகொண்டே மேஜிக் மேனை திட்டுவான். மேஜிக் செய்பவர்
புதிய பறவையைக் கொண்டுவந்தாலும் முதலில் மக்களுக்கு காட்டிய பறவை கொல்லப்பட்டிருக்கும். நல்லவர், கெட்டவர்
என அனுமானிக்க முடியாத கதாபாத்திரங்கள் படத்தில் பெரும்பலம். ஹ்யூஜாக்மேன், கிறிஸ்டியன்
பேல், ஸ்கார்லெட் ஜோகன்ஸன் ஆகியோர் நடிப்பில் கிறிஸ்டோபர் ப்ரைஸ்டின்
தி பிரஸ்டீஜ்(1995) நாவலை எழுதி இயக்கியவர், பிரிட்டிஷ்
இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன். திரைக்கதை: ஜோனாதன் நோலன்.
மஜித் மஜீதி
ஈரானிய
சினிமாவை உலகறியச் செய்த முக்கிய ஈரான் இயக்குனர் மஜித் மஜீதி. ஏப்ரல் 17,
1959 ம் ஆண்டு டெஹ்ரான் நகரிலுள்ள நடுத்தரக்
குடும்ப வாரிசு. சினிமாவின் ஈடுபாடுகொண்ட மஜீதி 14 வயதிலேயே நாடகங்களில் நடிகரானார். பின், குறும்படங்களை
இயக்கத் தொடங்கினார். வெள்ளித்திரைக்கு
தாவிய இவர் 1992-ல் ‘படுக்’
என்ற படத்தை இயக்கினார். இதற்குப் பிறகு 1997-ல் வெளியான ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்பட
உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஈரானின் சந்து பொந்துகளும், அங்கே வசிக்கின்ற
மக்கள் கூட்டமும்தான் இவரின் முக்கிய கதாபாத்திரங்கள். குழந்தைகள்தான் நாயகர்கள். அவர்களின்
இயல்புகள், ஆசைகள், கனவுகள் மிக நுட்பமாக, எதார்த்தமாக
பதிவு செய்யப்படுகிறது. இவரின் முக்கியமான படங்கள் : ‘க லர் ஆஃப்
பாரடைஸ்’, ‘பரன்’, ‘தி ஃபாதர்’, ‘தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்’.