இந்தியாவின் ந்திநீர் பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?



Image result for godavari river



அறிவோம் தெளிவோம்!

கோதாவரி

ஆந்திரா(45டிஎம்சி), மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா(35டிஎம்சி) ஆகிய மாநிலங்கள் நதி நீரை பெறுவதற்காக 1969 ஆம் ஆண்டு தீர்ப்பாயத்தை அமைத்தன. 2005-06 ஆண்டுகளில் மகாராஷ்டிரா போச்சம்பள்ளி அணையருகே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திரா எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தாலும் நீதிமன்றம் அணை கட்ட அனுமதி தந்துவிட்டது.

கிருஷ்ணா

ஆந்திரா(1001 டிஎம்சி), மகாராஷ்டிரா(666டிஎம்சி), கர்நாடகா(907 டிஎம்சி) ஆகியவற்றுக்கான நீர் தீர்ப்பாயம் 1969 உருவாகி 2004 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தெலுங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களும் நதிநீர் பங்கீடு குறித்து வழக்கு தொடர்ந்துள்ளன.

சட்லெஜ்- யமுனா நதி


பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 214 கி.மீ நீளும் கால்வாய் மூலம் நதி நீரைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டது. 1990 ஆம் ஆண்டு கால்வாய் மணி 90 சதவிகிதம் நிறைவடைந்தபின் பஞ்சாப்பில் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களால் அரசு திட்டத்தை கைவிட்டது. நிலத்திற்கான வாடகை ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என பஞ்சாப் அரசு அறிவித்ததை 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஏற்கமறுத்துவிட்டது. யமுனா நதி பங்கீட்டில் டெல்லிக்கும், ஹரியானவுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது