பெண்களுக்கு நிலவுரிமை அவசியத்தேவை!
முத்தாரம்
Mini
நிலத்தை பெண்களுக்கென பெற்றுத்தருவதில் நீங்கள் என்ன சவால்களை சந்தித்திருக்கிறீர்கள்?
உலகம்
முழுக்க சொத்துக்களின் மீது ஆண்களின் மேலாதிக்கம் உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம்.
இந்தியாவிலுள்ள 65 கோடி பெண்களில் பெரும்பாலோர் கிராமபுறத்தைச் சேர்ந்தவர்கள்.இந்து சட்டத்திருத்தம் 2005 படி, பெண்களுக்கு சொத்துக்களை வழங்க அரசியலமைப்புச்சட்டம் வழிவகை செய்துள்ளது.
சொத்து பத்திரங்களின் பெண்களின் பெயரை எழுதுவது அவர்களுக்கு சொத்துரிமை தருமா?
ஆவணங்களில் பெண்களின் பெயரைக் குறிப்பிட்டிருப்பது, பெண்களின் சொத்துரிமையை உறுதி செய்வதாகும். இச்செயல்பாடு பெண்களுக்கு தன்னம்பிக்கை தருவதோடு அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கும் பாதுகாப்பு தரும். குறிப்பாக விதவைகள் மற்றும் திருமணம் செய்யாத பெண்கள். எங்களின் லேண்டெஸா அமைப்பு பெண்களின் உரிமையை உறுதிப்படுத்த உழைக்கிறது.
லேண்டெஸா அமைப்பு பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆராய்ச்சிகள் ஏதேனும் செய்திருக்கிறதா?
நிலத்தை வைத்திருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கான பயன்களை பெற முடியும் என்பதால் பெண்களுக்கு நிலம் முக்கியமான சொத்து. நாங்கள் இந்தியாவில் செய்த ஆய்வுப்படி நிலம் மீதான பெண்ணின் சொத்துரிமை அவர்சார்ந்த குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது.
-கிறிஸ் ஜாக்னிக், லேண்டெஸா(உலக நிலவுரிமை இயக்கம்)