இடுகைகள்

கோரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழிபெயர்ப்பில் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பது அவசியம்! - டாக்டர் கே. செல்லப்பன், மொழிபெயர்ப்பாளர்

படம்
            டாக்டர் செல்லப்பன் மொழிபெயர்ப்பாளர் அண்மையில் மார்ச் 12 அன்று தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்த்த பணிக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார் . 2020 க்கான விருது இது . மொழிபெயர்ப்புக்கான விருது என்றாலும் கூட இது தாமதமாகவே இவருக்கு கிடைத்துள்ளது . தாகூரின் நாவல் இன்று கலாசாரம் சார்ந்து ஒருவருக்குள் எழும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்படி அமைந்துள்ளது . செல்லப்பன் புதுக்கோட்டையில் உள்ள ராஜா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார் . பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான கல்லூரிகளில் ஆசியராக பணியாற்றியுள்ளார் . இவரது கற்பித்தல் முறைகளை மாணவர்களே தன்னார்வமாக பணம் சேகரித்து ஆவணப்படமாக்கியுள்ளனர் . தூங்கும்போது வரும் கனவு அழகாக இருக்கிறது . எழும்போது கண்முன்னே உள்ள வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தத்துவமாக பேசுபவர் அப்படியேதான் வாழ்ந்தும் இருக்கிறார் அவரிடம் பேசினோம் . இந்த நேர்காணல் புத்தகத்திலுள்ளதன் சுருக்கமே ஆகும் . தாகூரின் கோராவை மொழிபெயர்ப்புக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ? அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அகாதெமியின் முடிவு . எனக்