இடுகைகள்

ராபர்ட் ஹரே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிணை கொடுப்பதற்காக உளவியலாளர்கள் கொடுக்கும் அறிக்கை!

படம்
  பிணை கொடுப்பதற்கான அமைப்பு வெளிநாட்டில் உண்டு. இந்த அமைப்பு குற்றவாளி யார், எப்படிப்பட்டவர், செய்த குற்றத்தின் இயல்பு ஆகியவற்றை அறிந்துதான் மனுவை பரிசீலிக்கிறது.. இந்தவகையில் உளவியலாளர் என்ன அறிக்கை கொடுக்கிறாரோ அதுவும் முக்கியம். இதில் குற்றவாளி பிரச்னையானவர் இல்லை என கொடுத்து வெளியில் சென்று குற்றம் செய்தால் உளவியலாளர் மட்டுமல்ல பிணை கொடுத்த அமைப்பும் மாட்டிக்கொள்ளும். கார்ல் வெய்ன் பன்டிசன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்த காரணத்தால் பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளானார். ஆனால் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு கார்லுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆறே வாரம், போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மோசமான குற்றச்செயல் செய்த நபருக்கு எதற்கு முன்கூட்டியே பிணை கொடுக்கிறார்கள்? கார்ல் என்ற நபருக்கு இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல. 1961ஆம் ஆண்டு தொடங்கி 1984ஆம் ஆண்டு வரையில் பண்ட்சன் நிறைய பிணை விதிகளை மீறித்தான் சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகள் தண்டனை கொடுத்த வழக்கில் கூட பத்து மாதங்களில் பிணை வழங்கப்பட்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். கார்லின் க

உளவியலாளர் ராபர்ட் ஹரேவை ஏமாற்றிய மோசடிக்காரன்!

படம்
  சைக்கோபாத்களை பொறுத்தவரை வசீகரமான ஆட்கள். நம்பினால் நிச்சயம் மோசம் செய்வார்கள். தெலுங்கில் ஊசரவல்லி என்பார்கள். பச்சோந்தி தான் இதன் பொருள். தனக்கு தேவைப்படும் விஷயங்களை அடைய தன்னை   மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எங்காவது தங்களின் அடையாளம் வெளிப்பட்டு பிரச்னை ஆகிறது என தெரிந்தால் உடனே கிளம்பி சென்றுவிடுவார்கள். பிறகு அங்கென்ன வேலை? எளிதில் பிறர் நம்பும்படியும், சோதிக்கமுடியாதபடியும் உள்ள வேலைகளை எடுத்துக்கொள்வார்கள். உளவியலாளர், நிதி ஆலோசகர், அமைச்சர்கள் என   பல்வேறு பதவிகளில் பணிகளில் உள்ளதாக அடித்து விடுவார்கள். உடனே சந்தேகம் கொள்ள முடியாதபடி சில துறை சார்ந்த வார்த்தைகள், வாசகங்கள் என   பலதையும் பேசி ஆச்சரியப்படுத்துவார்கள்.   கனடாவில் வான்கூவர் நகரில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இருந்தார். ஓராண்டுக்கு எளிய, சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தார். இதனால் நிறைய நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உடல், பொருளாதாரம், மன உளைச்சல் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டனர். இதேநபர் பின்னாளில் இங்கிலாந்தில் உளவியலாளராக இருந்தார். ஆனால் இம்முறை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரை சரியாக திட்டமிட்டு கைது

விழிப்புணர்வுடன் செய்யப்படும் கொலைகள்- ராபர்ட ஹரேவின் பணிக்கால வாழ்க்கை

படம்
  கொலைகளை செய்கிறார்களே இவர்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதாக என சிலர் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது. தான் செய்வது என்னவென்று செய்யும் கொலையாளிகளுக்கு தெரியும். அவர்கள் அதற்கான இயல்பில்தான் கொலைகளை செய்கிறார்கள். அதை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாமல் மறைக்கிறார்கள். இதில் சைக்கோபாத்களுக்கு உள்ள பொதுவான தன்மை, சிறுவயதில் வன்முறையை, அவமானங்களை, மாறாத துயரங்களை அனுபவிப்பது. இப்படி பாதிப்புகளை எதிர்கொள்ளும் அனைவருமே பிறரை கொல்வதில்லை. சமூகத்தை வதைப்பதில்லை. சிலர் மட்டும் அந்த வலியில் இருந்து மீளாமல் நின்றுவிடுகிறார்கள். பிறகு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நினைத்துப் பார்க்க முடியாத வலியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நாம் சரியாக அடையாளம் காணாதபோது நாமே கூட அவர்களுக்கு இரையாகி இறந்துபோகலாம். ஏன் இறந்தோம் என்பதற்கான காரணத்தைகொலைகாரர் பிடிபடும்போது கூறுவார். அல்லது அவரது பினாமியாக பத்திரிகையாளர்கள் நூல்களை எழுதுவார்கள் கே.என்.சிவராமன் போல நூல்களை சாதனை விலையில் விற்பார்கள். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறதுதான். இன்று சமூகத்தில் நிலவும் பிரச்னை என்னவென்றால் குற்றத்தைப்

மனநலனிற்கான தெரபி தேவை!

படம்
உளவியலாளர்களை முக்கியப்படுத்தும் நியூரோஇமேஜ்! இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தன்னிலையில் இல்லாதவர்களை, மனநிலை பிறழ்ந்தவர்களை விடுதலை செய்துவிடுவார்கள். செய்த தவறை அவர்களால் உணராத சூழலில் அவர்களுக்கு தண்டனை அளித்தாலும் அதனால் பிரயோஜனமில்லை என்பதே இதற்கு காரணம். இதே சூழ்நிலை ராபர்ட் ஹரேவின் உதவியாளரும் மாணவருமான கீலுக்கு ஏற்பட்டது. சிகாகோவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதியின் மீது 1983 ஆம் ஆண்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கு சுமத்தப்பட்டது. அவருக்கு நியூரோ இமேஜ் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஐக்யூ அளவு 140 என முடிவு வந்தால் மனநிலை பிறழ்ந்தவர் என மரணதண்டனை கைவிடப்படும் வாய்ப்பு இருந்தது. இன்று இலினாய்சிலும் கூட மரணதண்டனை கைவிடப்பட்டு விட்டது. அச்சூழலில் ஒன்பது மாநிலங்கள் மரண தண்டனையை கைவிட்டிருந்தன. இன்று டிஎன்ஏ டெஸ்ட் போலவே நியூரோஇமேஜ் டெக்னிக், எம்ஆர்ஐ டெஸ்ட் குற்றவாளிகளுக்கு எடுத்து சமர்ப்பிக்கிறார்கள் என்றார் கீல். இன்று மக்களுக்கு மூளை குறித்த ஸ்கேன் எடுப்பது சுவாரசியமான விளையாட்டு போலாகிவிட்டது. ஆனால் இதில் இயல்பான மூளை பற்றிய கவ

அசுரகுலம் - சைக்கோ சொல் பிறந்த கதை!

படம்
உளவியல் மருத்துவர் ராபர்ட் ஹரே! வெஸ்ட் வான்கூவர் பப்பில் இருந்த ராபர்ட் ஹரேவைச் சந்தித்தோம். உங்கள் கண்களைப் பார்க்க முடியவில்லையே என கீழே வந்தார். கனடாவின் முக்கியமான உளவியலாளர். கொடூரம், ரத்தவெறி, சுயநலம், விதி மீறல் என பல சிறைக்கைதிகளை பார்த்து அவர்களுக்கு சிகிச்சையளித்த அனுபவஸ்தர். நாம் அசுரகுலத்தில் டெட் பண்டி போல சிலரைப் பார்த்தோம். ஜான் வெய்ன் கேசி, பால் பெர்னார்டோ , கார்லா ஹோமோல்கா ஆகியோர் பலருக்கும் அறிமுகமான சைக்கோ கொலைகார ர்கள். ஆனால் இவர்கள் தவிர அந்தஸ்தானவர்கள் என அறிமுகம் கொண்ட முகமூடிக்குள் பலர் மனநிலை பிறழ்வுடன் உள்ளனர். இது பலருக்கும் தெரியாமலே போய்விடும் நிகழ்ச்சிகளும் வரலாற்றில் உண்டு. பொதுவாக சொல்வது சிறையிலுள்ள 70 சதவீத நபர்களுக்கு மனநிலை பிறழ்வு பிரச்னைகள் உண்டு என்று. இதனை பலர் மூளையில் ஏற்படும் நியூரான் கோளாறு என்பது போல புரிந்துகொள்கின்றனர்.  பாப்பினி மோகன், அந்நியன் விக்ரமைப் போலவா என்று கேட்டிருந்தார்.  அந்நியன், குடைக்குள் மழை  போன்ற படங்களில் பிளவாளுமை பிரச்னையைப் பேசியிருப்பார்கள். மனதுக்குள் அடக்கியாளும் உணர்ச்சிகள் இரவில் கனவாக வெடிக்கு