அசுரகுலம் - சைக்கோ சொல் பிறந்த கதை!




DSC-D0616_08




உளவியல் மருத்துவர் ராபர்ட் ஹரே!

வெஸ்ட் வான்கூவர் பப்பில் இருந்த ராபர்ட் ஹரேவைச் சந்தித்தோம். உங்கள் கண்களைப் பார்க்க முடியவில்லையே என கீழே வந்தார். கனடாவின் முக்கியமான உளவியலாளர். கொடூரம், ரத்தவெறி, சுயநலம், விதி மீறல் என பல சிறைக்கைதிகளை பார்த்து அவர்களுக்கு சிகிச்சையளித்த அனுபவஸ்தர்.

நாம் அசுரகுலத்தில் டெட் பண்டி போல சிலரைப் பார்த்தோம். ஜான் வெய்ன் கேசி, பால் பெர்னார்டோ , கார்லா ஹோமோல்கா ஆகியோர் பலருக்கும் அறிமுகமான சைக்கோ கொலைகார ர்கள். ஆனால் இவர்கள் தவிர அந்தஸ்தானவர்கள் என அறிமுகம் கொண்ட முகமூடிக்குள் பலர் மனநிலை பிறழ்வுடன் உள்ளனர். இது பலருக்கும் தெரியாமலே போய்விடும் நிகழ்ச்சிகளும் வரலாற்றில் உண்டு.

பொதுவாக சொல்வது சிறையிலுள்ள 70 சதவீத நபர்களுக்கு மனநிலை பிறழ்வு பிரச்னைகள் உண்டு என்று. இதனை பலர் மூளையில் ஏற்படும் நியூரான் கோளாறு என்பது போல புரிந்துகொள்கின்றனர்.  பாப்பினி மோகன், அந்நியன் விக்ரமைப் போலவா என்று கேட்டிருந்தார். 

அந்நியன், குடைக்குள் மழை  போன்ற படங்களில் பிளவாளுமை பிரச்னையைப் பேசியிருப்பார்கள். மனதுக்குள் அடக்கியாளும் உணர்ச்சிகள் இரவில் கனவாக வெடிக்கும். அதில் நாயகன் நிஜ உலகில் கோமாளியாக பார்க்கப்படுபவன்தான். சந்தேகமில்லை. அப்படி கனவு கண்டும் அந்த அவமானம், வலி தீரவில்லையா? சமூகம் தனது மக்களை அதற்கு பழிகொடுக்கவேண்டும். வேறு வழியில்லை. சைக்கோ கொலைகார ர்கள் அப்படி உருவாகிறவர்களே. 

சைக்கோ மனிதர்களுக்கான செக் லிஸ்ட்டை உருவாக்கிய ஆளுமைகளில் ஒருவர் ஹரே.  1980 ஆம் ஆண்டு உருவாக்கிய இந்த லிஸ்ட்டை சோதித்து 91 இல் வெளியிட்டார். இன்றுவரை இவர் உருவாக்கிய அந்த விதிகள் ஆய்வாளர்கள், மருத்துவத்துறை , தடய அறிவியல், நீதித்துறை  உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுத்து அணுகப்படுகிறது.

2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஹரேவுக்கு இன்று 82 வயது. இன்றும் ஆராய்ச்சியாளராக பல்வேறு விஷயங்களில் அரசுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் ஆலோசனைகளைக் கூறி உதவி வருகிறார்.

2

சைக்கோ பாத் என்ற வார்த்தை இன்று மூலை முடுக்கெங்கும் பேசப்பட்டு வருகிறது. தஷ்வந்த் முதல் பொள்ளாச்சி பாலியல் அத்துமீறல்கள் வரை குற்றவாளிகளின் மனநிலையை யாராலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே சாந்தோமில் அனிமேஷன் இன்ஸ்டிடியூட் பிரம்மச்சாரி செக்யூரிட்டி மனிதர், பத்து வயது குழந்தையிடம் அத்துமீறியதாக நண்பர் காதில் கிசுகிசுக்கிறார்.


1800 இல் கிரீக்கில் சைக்கே (psykhe) மற்றும் பாதோஸ் (Pathos) என்பதற்கு நோயுற்ற மனம் என்று பொருள். அந்த காலத்தில் இப்பிரச்னையை அப்படித்தான் பார்த்தார்கள் என்று புரிந்துகொண்டால் போதும். இருபதாம் நூற்றாண்டில்  உளவியலாளர் ஹெர்வி கிளெக்லி,  தி மாஸ்க் ஆஃப் சானிட்டி  என்ற நூலை எழுதினார். இதில் ஜார்ஜியா பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணிபுரிந்தபோது நடந்தஅனுபவங்களை எழுதியிருந்தார். அதில் மனநோயாளிகளுக்கான அடையாளங்கள், அறிகுறிகளை விளக்கியிருந்தார்.

கிளெக்லி மனநிலை பிறழ்ந்தவர்களை, உளவியல் உலகம் புறக்கணித்த மனிதர்கள் என்று அழைத்தார். கொடூரமான மனநல பாதிப்பு கொண்டவர்களை அவர் தன் வாழ்க்கையில் சந்தித்திருந்தார். சோதனையில் வெளித்தெரியாத மனதின் இருள் பக்கங்களை சமூகத்தின் பின்னர் கண்டார். மனநிலை பாதித்தவர்களுக்கு சிறை குறுகிய கால தண்டனையையே வழங்கியது. வெளியே வந்தவர்கள் மீண்டும் தங்கள் குருதிவேட்டையைத் தொடங்கினர். என்ன ரகசியமாக செய்தனர். இந்த விவகாரங்கள் பின்னர்தான் தெரிய வந்தன. 
துரதிருஷ்ட வசமாக கிளெக்லியின் நூல், அவர் கூறிய கருத்துகள் என அனைத்தும் மருத்துவ குழுக்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.  அறுபதுகளில் வெளியிடப்பட்ட  டயக்னாஸ்டிக் அண்டு ஸ்டேட்டிஸ்கல் மானுவல்(DSM) நூலில் கூறப்பட்ட பொருட்கள் பின்னாளில் மாற்றம் கண்டன. மனநிலை பாதிப்பு என்பது சமூக புறக்கணிப்பு, உணர்ச்சிகளற்ற தன்மை ஆகியவை பொருள் கொள்ளப்பட்டன.  இன்று இதன் அடிப்படையில்  பார்த்தால், பலரும் போன்களை நோண்டியபடி தனியாக நிற்கின்றனர். அன்பரசு போன்ற ஆட்கள் பஸ்சிலே கூட போனிலே இபுக் படித்தபடி வருகின்றனர். கேட்டால் படிப்பு முக்கியம் என முறைக்கின்றனர். அதனால் அந்த கோட்பாட்டு நூல்படி இந்த ஆட்களும் கூட சமூகத்தில் கலக்கவில்லையே  என கூறலாம்.  ஆனால் இவர்கள் அந்த லிஸ்டில் சேர மாட்டார்கள். 
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: டிஸ்கவர் இதழ், க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன், பாபு பெ.அகரம், விக்கி பீடியா, சைக்காலஜி டுடே




பிரபலமான இடுகைகள்