அங்கதமான அறிவியல் படிக்க ரெடியா?





Image result for what if randall munroe



வாட் இஃப் - ராண்டல் மன்றோ

விலை ரூ.499



இப்படி நடந்தால் என்ன? என்று சிலமுறை யோசித்திருப்போம். அதனாலேயே வகுப்பில் பல மாணவர்களை கிண்டல் செய்து சிரித்திருப்பார்கள். சிரித்திருப்பீர்கள்.

அப்படி பல கேள்விகளை வலைத்தளத்தில் கேட்டு அதற்கு கார்ட்டூனிஸ்ட் ராண்டல் மன்றோ பதில் சொல்லியதை நூலாக்கி யிருக்கிறார்.

அதற்காக, நூலை வலைத்தளத்திலேயே படிக்கலாமா என்று கேள்வி கேட்க கூடாது. நான் பிடிஎஃப் வடிவில் படித்தேன். என் அருகில் இருந்தவர், பிடிஎஃப் வேலைக்காகாது என நூலை ஆர்டர் செய்து வாங்கி விட்டார்.

லட்சியம் படிப்பதுதானே, எந்த வடிவத்தில் இருந்தால் என்ன?


கோக்குமாக்கான கேள்விகள். அதனால் பதில் வேண்டுமே என்றெல்லாம் கேள்விகள் கிடையாது. கிடைச்சா சந்தோஷம் இல்லைனா அதைவிட சந்தோஷம் என்பதுதான் இந்த கேள்விதார ர்களின் நோக்கம். கார்ட்டூனிஸ்ட் தன் ஓவியங்களின் உதவியுடன் அதனை கர்ம சிரத்தையாக நிறைவேற்றி இருக்கிறார்.

அணுஆயுதக் கப்பல் போல விண்வெளியில் செய்ய முடியுமா? எவ்வளவு நேரம் அழுதால் நம் உடலிலுள்ள நீர் முழுக்க வற்றும்? நம் டெக்னாலஜியைப் பயன்படுத்தி புதிய கோளை உருவாக்க முடியுமா? தற்போதைய மக்கள் தொகையில் நாம் நமக்கு பொருத்தமான துணையை எப்படி தேடிப்பிடிப்பது? கடலை கால்வாயாக வெட்டினால் உலக வரைபடம் எப்படி மாறும்? என விதவித டிசைனில் யோசித்து மிரட்டியிருக்கிறார்கள்.

ராண்டல் மன்றோ என்ன சாதாரண ஆளா, தன் கார்ட்டூன் திறமையோடு எழுத்து திறமையையும் காட்டி அசத்தியிருக்கிறார். வாசிப்பதில் உங்களுக்கு சோர்வே வராது. அத்தனை தகவல்களை ஆராய்ந்து கணிதம், வானியல், விண்வெளி அறிவியல், இயற்பியல், உயிரியல், தொல்பொருளியல் என அனைத்திலும் புகுந்து வெளியே பதிலைக் கொண்டு வந்துவிடுகிறார்.


இங்கிலாந்தில் அதிகம் விற்பனையான நூல் இது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. படு சுவாரசியமான நூல் இது. பொதுவாகவே அறிவியல் நூல்களை கட்டுரையாக வாசிப்பதற்கு பெரும் தடை அதன் எழுத்து வடிவம்தான். லியோ டால்ஸ்டாய் காலத்து ஸ்டைலில் எழுதி சாவடிப்பார்கள். இவர் அப்படி தவறு செய்யவில்லை. இளமையும் இனிமையுமாக பேரம் பேசாமல் ஸ்வாக் சொல்லி பெப்சி குடிப்பதுபோல நூல் செம ஜாலியாக செல்கிறது.

இது அறிவியல் நூல்தான் என்பதற்கு அட்டை முதற்கொண்டு எங்கும் அந்த முசுட்டுத்தனம் இருக்காது என்பதே நூலின் மிகப்பெரிய வெற்றி. ஜாலியாக கேலியாக ஒரு அறிவியல் நூலை படிக்கவேண்டுமென்றால் நிச்சயம் நீங்கள் இந்த புக்கை வாங்கிக்கூட வேண்டாம். நெட்டில் பிடிஎஃபாக கிடைக்கிறது. டவுன்லோடு செய்து படியுங்கள்.


ச.அன்பரசு

நன்றி: சீதா ஜனனி, பிடிஎஃப் டிரைவ் தினமலர் பட்டம்
















பிரபலமான இடுகைகள்