கலக்கல் கேட்ஜெட்ஸ்!




Image result for gadgets





ஜாலி கேட்ஜெட்ஸ்!

இந்த ஆண்டிற்கான கன்ஸ்யூமர் டெக்னாலஜி அசோசியேஷன்(CES) நிகழ்ச்சியில் அறிமுகமான சில வினோத கேட்ஜெட்ஸ் அணிவரிசை. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்ல; இதுபோன்ற பொருட்களும் இன்று மக்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றன.

க்யோபோ (Qoobo)

க்யோபா என்பது, வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் பொம்மை. செல்ல பெட்களை வீட்டில் வளர்க்க முடியவில்லையா? க்யோபோவை வாங்கி கட்டிப்பிடித்துத் தூங்கலாம்.  இந்த பொம்மைக்கு முகமோ, கால்களோ கிடையாது.

டயாபர் சென்சார்  (smart diaper sensor)

பெயரே கேட்க ஒருமாதிரி இருக்கிறதா? செயல்படுவதும் அப்படித்தான். கொரியாவைச் சேர்ந்த மோனிட் என்ற நிறுவனம், உருவாக்கிய படைப்பு. உங்கள் குழந்தை டயாபரில் சிறுநீர் அல்லது மலம் கழித்த அடுத்தநொடி உங்களுக்கு, இணையம் வழியாக அலர்ட் வந்துவிடும். எதற்கு இது? என்று மீண்டும் கேள்வி வருகிறதா? வாங்கிப் பார்ப்பதுதான் ஒரே வழி.

ஹப்னோஸ் மாஸ்க் (Hupnos sleep mask)

குறட்டை விடுவது விவாகரத்துக்கு கூட காரணமாகி வருகிறது. இந்தப் பேரிடரைத்  தடுக்கத்தான், ஹப்னோஸ் ஸ்லீப்பிங் மாஸ்க். தூங்கும்போது வரும் குறட்டையை அடையாளம் கண்டு, அதனை நிறுத்துவதற்காக வைப்ரேஷன்களை வெளியிடுகிறது மாஸ்க். இதற்கும் பயனில்லையா? உடனே வெளிவிடும் காற்றின் அழுத்தத்தை அதிகரித்து, குறட்டைக்கு காரணமானத் தடைகளை உடைக்கிறது. எப்படி ப்ரோ சாத்தியம்? அதெல்லாம் அப்படித்தான்.

மூக்கி பெட் பௌல் (mookkie pet bowl)

உங்களது லஞ்சை நண்பர்களேயானாலும்  திருடிச் சாப்பிடுவது பிடிக்காது அல்லவா? அதேதான். பூனைகளின் உணவை பிற பூனைகள், நாய்கள் திருடி சாப்பிடுவதைத் தடுக்கும் சாதனம் இது. பிற பிராணிகள் இந்த சாப்பாட்டுக் கிண்ணத்திடம் சாப்பிட வந்தால்,  அதற்கு சொந்தக்காரப் பூனையின் படம் இதில் காட்டப்பட்டு பயமுறுத்தப்படும்.

கோஹ்லர் ஸ்மார்ட் கழிவறை (Kohler Smart Toilet Numi 2.0)

கழிவறைக்கு எதற்கு ஸ்மார்ட் தொழில்நுட்பம் என்று கேட்க கூடாது? அலெக்ஸா மூலம் இயங்கும் இந்த கழிவறையில், உங்கள் மனநிலைக்கேற்ப விளக்குகளை எரியவிடலாம், பாடல் கேட்கலாம்.


நன்றி: தினமலர் பட்டம்

பிரபலமான இடுகைகள்