கொல், கற்பழி, தூக்கியெறி - யோசிரா கொடைரோ
அசுரகுலம்
இவன் வேற மாதிரி - யோசிரா கொடைரோ
யோசிரோ கொடைரோ மிகச்சிறந்த கற்பழிப்பு வல்லவர். 1945 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் தன் மாமனாரைக் கொன்றார். அதோடு பத்து பெண்களையும் கொன்று உப்புக்கண்டம் போட்டார்.
யோசிரோவுக்கு மிகச்சிறந்த கெட்டபழக்கம் ஒன்றுண்டு. கொன்ற பிணங்களோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம். அதனை ஆங்கிலத்தில் நெக்ரோபிலியா என்று அழைக்கின்றனர். தீராத அலைகழிக்கும் பாலுறவு ஆசை இப்படி யோசிராவை அலைகழித்து இன்று இதோ நான் எழுதும் கட்டுரையிலும் அவருக்கு அவமானத்தை தேடி தருகிறது. அவர் வெட்கப்பட ஏதுமில்லை. ஏனென்றால் உலகிலுள்ள சைக்கோ கொலைகாரர்களில் பெரும்பாலானவர்களுக்கு நெக்ரோபிலியா எனும் செக்ஸ் ஆசை உண்டு.
இவர் செய்த ஐந்தாவது கொலையில் கர்ப்பிணியின் தொப்புள் வழியாக கத்தியைச் செருகினார். இதிலிருந்தே சார் எப்படிப்பட்ட கொதிப்பான மனநிலையில் சம்பவங்களை செய்கிறார் என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். யோசிராவின் சமூக சேவைகளைப் பாராட்டி ஜப்பான் அரசு 1948 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது. பின் ஓராண்டுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
நன்றாக வளர்ந்திருக்க வேண்டியவர்தான். உலகம் அனைவருக்குமே நியாயமாக நடந்துகொள்கிறதா என்ன?
1905 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று ஜப்பானில் யோசிரோ பிறந்தார். ஆனால் பிறந்த இடம்தான் சரியில்லை. டோச்சிக்கி என்ற நகரில் எந்த பிரச்னையுமில்லை. பெற்றோர்கள்தான் சிக்கல். குடிநோய்க்கு அடிமையான தந்தையால் வீட்டில் சோறும் இல்லை. பிரச்னைகளுக்கும் அடிதடி உதைகளுக்கும் பஞ்சமில்லை. இதனாலோ என்னமோ யோசிரோ அதிகம் பேசவில்லை. இதனால் மெல்ல திக்குவாய் ஏற்பட்டது.
ஜப்பானும் இந்தியாவும், சீனாவும் கூட ஜாதி வர்க்கம் சார்ந்து உருவானவை. யோசிரோவின் பள்ளியிலும் ஜாதி, பொருளாதாரம் சார்ந்து அவர் தினந்தோறும் கிண்டல் செய்யப்பட்டார். அனைத்தையும் பொறுத்தார். உள்ளுக்குள் வளர்ந்த விஷச்செடியை அவர் மட்டுமே ரகசியமாக தடவிக்கொடுத்து ரசித்தார். பதினான்கு ஆண்டுகள். ராமனின் வனவாசம் போல டிப்ளமோ பட்டம் பெற்று வெளியே வந்தார்.
திருமணம் கூட ஆகிவிட்டது. அடுத்து என்ன? போருக்கு சென்று வந்த அனுபவமும் மனதை கடுமையாக்கிவிட யோசிரோவினுள்ளிருந்த அரக்கன் எழுந்தான். அதற்குள்ளாகவே சில திருட்டு, தாக்குதல் என சிறை, போலீஸ் அடி எல்லாமே பழக்கமானது.
இவரின் மனைவி இவரை வைத்து என்ன செய்தாரோ தெரியவில்லை. ஆனால் யோசிரோ பெண்களை வீட்டுக்கே தூக்கி வந்து தாக்கி வல்லுறவு செய்து கொலை செய்து போடும் துணிச்சலில் திரிந்தார். அப்போது அவருக்கு வயது 23.
1946 ஆம் ஆண்டுதான் போலீஸ் இவரை கைது செய்தது. இவ்வளவு லேட்டா என்றெல்லாம் ஆவேசப்படக்கூடாது. சட்டம் தன் கடமையை கண்ணை மூடிக்கொண்டுகூட செய்யும். செய்ததா இல்லையா என்பதுதான் விஷயம்.
கொலை, கற்பழிப்பு ஆகியவற்றுக்கு குற்றச்சாட்டு விதிக்கப்பட ஆதாரங்கள் நிறைய இருக்க யோசிரோ அனைத்தையும் ஒத்துக்கொண்டார். இதனால் தூக்குத்தண்டனையை சரவணா ஸ்டோர் ஆஃபரில் நீதிபதி எழுதி பேனா முனையை உடைத்தார். வகாபயாஷி கு பகுதியில் இருந்த மியாகி சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 41 வயதில் கைது செய்யப்பட்டவர், சிறைதண்டனைக்குள்ளாகி 44 வயதில் தூக்கிலிடப்பட்டார்.
கொலை பாணி
15 முதல் 32 வயதான பெண்களை இரும்புக்கம்பியால் அடித்து உதைத்து வல்லுறவு செய்வது இவரது பாணி. அப்புறமும் அந்தப்பெண் அசரடிக்கும் அழகி, கனவிலும் கூட நினைத்து பார்த்து ஸ்கலிதமாகிறதா? உடலை தோண்டியெடுத்து பாலுறவு கொள்வார்.
போர் அனுபவம்
சீனா - ஜப்பான் போரில் பங்கேற்ற வீரர். கொலை அனுபவம் ரத்தத்தில் சூடேற்றியது இங்குதான். ஆறு சீன வீர ர்களை ரசித்துக்கொன்றார். இது நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு. கொலை மட்டும் யோசிராவுக்கு போதவில்லை. நிறைய சீனப் பெண்களை வல்லுறவு செய்தார். கர்ப்பிணியைக் கொன்றார் இல்லையா அச்சம்பவம் சீனாவில் செய்த அட்டூழியம்தான்.
கல்யாணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. கட்டுக்கடங்காத காமவெறி மனைவியை வீட்டை விட்டு துரத்தியது. இன்னொரு பெண்ணுடன் உறவாகி, குழந்தையே வந்துவிட்டபிறகு மனைவி எப்படி வாழ்வது? மனைவி விலகியவுடன் ஊர் சும்மா இருக்குமா? ஊர் இவரது ஆண்மையை கேலி பேச, இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு மனைவியைப் பார்க்க சென்றார்.
முதலில் நியாயம் பேச வந்த மாமனாரை இரும்புக்கம்பியால் ரத்தம் சிதற சிதற கபாலத்தை நொறுக்கி கொன்றார். பின்னும் கோபம் அடங்கவில்லை. அங்குள்ள குடும்ப உறுப்பினர்களை அடித்து உடலில் இரும்பால் அடித்தால் எது உடையுமோ அதனை உடைத்தார். 1932 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம். மனைவி தெரித்தோடினாரா, இவர் துரத்தினாரா என்று ஜப்பான் டைம்ஸ் சரியாக விவரம் தரவில்லை. இதற்கு கைதானவரை போலீஸ் 1940 ஆம் ஆண்டு வெளிவிட்டுவிட்டது.
தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்படுவதற்கு முன்புவரை ரிலாக்ஸாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார் யோசிரா.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: கில்லர் பீடியா, ரேங்கர்