டாய்லெட் கழிவுகள் என்னாகின்றன?
கழிவுகள் என்னாகின்றன?
பொதுவாக மனிதக்கழிவுகளை தூ என தூக்கி எறிவது ரயிலில்தான். பிற இடங்களில் விமானம் போன்றவற்றில் அப்படி செய்வதில்லை. என்ன டெக்னிக்குகளை பயன்படுத்துகிறார்கள் என்று அறிவோம்.
பொதுவாக மனிதக்கழிவுகளை நீர் ஊற்றி ஃப்ளஷ் செய்தவுடன், அது கழிவுநீர் தொட்டிக்கு செல்லும். அங்கு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி கழிவின் நாற்றம், கிருமிகள் அகற்றப்படும். இது பொதுவான முறை.
பின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் மனிதக்கழிவுகளை உறையச்செய்து அதன் நாற்றம், கிருமியைக் குறைக்கிறது. உறையவைக்கும் நிகழ்வில் வெளிப்படும் வெப்பம் உங்கள் பூட்டிக்கு இதம் சேர்க்கும்.
நீரின்றி தவிக்கும் பகுதிகளில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. நேராக கழிவறை சென்றுவிட்டு உபாதையை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம். மண்ணில் சேரும் கழிவுகள் மெல்ல பாக்டீரியா, வைரஸ் சேர்க்கப்பட்டு மண்ணுக்கு உரமாகும்.
மண் உரத்திற்கு அடுத்தபடி வேறென்ன தகனமேடைதான். உங்கள் உடலை எப்படி மின்தகனம் செய்கிறார்களோ அதேபோல் கழிவுகளையும் சாம்பலாக்குகிறார்கள்.
நன்றி: க்வார்ட்ஸ்