இடுகைகள்

மார்க்கெட்டுக்கு புதுசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நலம் தேடும் கேட்ஜெட்ஸ் 2019 (ஜூன்)

படம்
மார்க்கெட்டுக்குப் புதுசு! Hexoskin Smart Shirts டிஷர்ட்கள் மற்றும் மார்பில்  பயன்படுத்தும் உடை. இதில் உள்ள ட்ராக்கர் இதயத்திலுள்ள துடிப்புகளை பதிவு செய்யும் திறனுடையது. மூச்சுக்களின் அளவு, இசிஜி, உடற்பயிற்சியின் அளவு ஆகியவையும் இதில் பதிவு செய்யப்படுகிறது.  Suunto 9 சுன்டோ 9 என்பது ஜிபிஎஸ் மற்றும் தொலைவைக் கணக்கிடுதல், பல்வேறு விளையாட்டுகளுக்கேற்ப செட்டிங்  ஆகிய வசதிகள் இதில் உண்டு.  COROS PACE இதுவும் அத்லெட்டுகளுக்குத்தான். கையில் மாட்டினாலும் இதயத்துடிப்புகளை கணிக்கும். எப்போதும்போல ஜிபிஎஸ் உண்டு. நீங்கள் தூங்கினாலும் இந்த வாட்ச் கண்விழித்து உங்களைக் கண்காணிக்கும். இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது ஆப்ஷன்கள் குறைவுதான். Epicore Biosystems Microfluidic Sensor கையில் ஒட்டிக்கொள்ளும் சென்சார், வியர்வை மூலம் இதயத்துடிப்பு, உடலில் வியர்வை மூலம் வெளியாகும் எலக்ரோலைட் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. இந்த சென்சார் இன்னும் ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளில் உள்ளது. ஆனாலும் டிரையல்களில் அசத்துகிறது என்பதுதான் நம் கருத்து. நன்றி: பிபிசி

மோட்டோ இசட் 4 எப்படி?

படம்
Moto Z4 மோட்டோ இசட் 4 பெரிய அம்சங்களோடு வெளிவரவில்லை. எதற்கு போட்டி?  கூகுளின் பிக்சல் 3எ, ஆசுஸ் ஸென்போன் 6.  இந்த போன் மோட்டோவின் முந்தைய போன்களையெல்லாம் நினைவுபடுத்துகிறது.  பேட்டரி, ஜேபிஎல் ஸ்பீக்கர், வயர்லெஸ் சார்ஜ், இன்ஸ்டா ஷேர் பிரின்டர் போன்ற வசதிகள் ஜோராக ஈர்க்கின்றன. மோட்டோ இசட் 4 என்பது ஒரு மாடுலர் போன் எனவே இதிலுள்ள பாகங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப கழற்றி மாட்டி களேபரம் செய்யலாம்.  ஓஎல்இடி திரையை சென்னை வெயிலிலும் பளிச்சென பார்க்க முடியும். கொரில்லா கிளாஸ் நம் கைரேகைகள் திரையில் அசிங்கமாக தெரிவதை மறைக்கின்றன. ஆப்டிகல் சென்சார் மூலம் விரல் ரேகையை ஸ்கேன் செய்வது படுமந்தமாக வேலை செய்கிறது. டெஸ்ட் செய்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தினத்தந்தியே வந்துவிடும். இந்த விஷயத்தில் சாம்சங் பரவாயில்லை.  எனவே, ஃபேஸ் அன்லாக் வசதியைப் பயன்படுத்தி மோட்டோவைப் பயன்படுத்தலாம்.  பரவாயில்லை எனும் ரகத்தில் வேலை செய்கிறது இந்த வசதி. மோட்டோ இசட்டில் ஹெட்போன் துளையை தூக்கியெறிந்த கம்பெனி, இசட் 4 இல் மீண்டும் அதனைப் பொருத்தியுள்ளது.  நீருக்கு எதிரான பாதுகாப்பு என்