இடுகைகள்

தாராளமயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதி சிங்கம் பாதி நரி கால்வாசி எலி - நரசிம்மராவின் கதை!

படம்
open நரசிம்மராவ் வினய் சீத்தாபதி தமிழில் - ஜெ.ராம்கி கிழக்கு பம்மலப்பட்டி வெங்கட நரசிம்மராவ், இந்திய அரசியலில் இன்று மறக்கப்பட்ட முகம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள், நினைவுநாள் என எதிலும் பங்குகொள்வதில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர காங்கிரஸ் முகங்கள் யாரையும் நினைவஞ்சலியில் பார்க்க முடியாது. அரசியலில் சிங்கத்திற்கு வைக்கப்பட்ட பொறிகளை நரியாக கண்டுபிடித்து, முற்றுகையிடும் ஓநாய்களை சிங்கமாக மாறி விரட்டி ஆட்சி செய்த பிரதமர். ஆந்திராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, வசதியாக வாழ்ந்தவர். குடும்பத்தில் அதிக மொழிகள் கற்ற புத்திசாலி. ஆங்கிலம் கற்பதற்கு முன்பே ஐந்து மொழிகள் கற்றவர். இவர் மீதான குற்றச்சாட்டாக பாபர் மசூதி இடிப்பு கூறப்படுகிறது. அக்காலகட்ட நிகழ்ச்சிகளை நேர்த்தியாக வினய் சீத்தாபதி பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ராவ் நேர்மையானவர். ஆனால், நேர்மையாக அரசியல் செய்தவரல்ல என்ற வரி போதும். ராவ் அரசியலில் குதிரை பேரங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலில் சூட்கேஸ் வாங்கிய குற்றச்சாட்டு ராவ் மீது களங்கத்

தேர்தலின் கதை 2 - தாமரை மலர உதவிய கை!

படம்
Telegraph India தேர்தலின் கதை 2 பதினேழாவது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வருவார்கள்? மோடியா, ராகுலா என  விவாதங்கள் அனல் பறக்கின்றன. இதற்கு முன்னர் தேர்தலின் கதையில் மக்களவைத் தேர்தல் குறித்த வெற்றி, தோல்வி விவரங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இதோ... 1989 பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சி, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் விவகாரத்தை ராஜீவ் கையாண்ட விஷயங்கள் இத்தேர்தலின் போது பேசப்பட்டன. சோசலிஸ்டுகள் இம்முறையும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் 143 சீட்டுகளை மட்டுமே பெற்றனர். விபி சிங்கின் தேசிய முன்னணி சிறுபான்மை அரசாக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. இடதுசாரிகளும் பாஜகவும் இந்த அரசுக்கு உதவியாக இருந்தன. ஆனால் ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ, சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைத்தார். 1991 இத்தேர்தலிலும் காங்கிரஸ் தன் பெரும்பான்மையை விட்டு கொடுத்துவிட்டது. இதனால் சிறுபான்மை அரசான காங்கிரஸ், நரசிம்மராவை ஆட்சித்தலைவராக கொண்டு ஆட்சி செய்தது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பெரும்பான்மை பலமின்றி சமாளித்தே ஆட்சி செய்தது சிரிக்காத