இடுகைகள்

என்எஃப்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்முறை விஷயங்கள்!

படம்
அமிதாப் பையா நம்பர் 1 இந்தி சினிமா நடிகரான அமிதாப் பச்சன், இந்தியாவில் தனது திரைப்படங்கள் தொடர்பான என்எஃப்டி டோக்கன் விற்பனையைத் தொடங்கினார். இவரைப் பின்பற்றி இன்னும் நிறைய நட்சத்திரங்கள் இந்த தொழிலில் இறங்கினர். எல்லாமே வியாபாரம்தான் ப்ரோ? வாட்ஸ்அப் தனது புதிய பிரைவசி கொள்கைகள் அறிமுகப்படுத்தியது. தனது தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள பயனர்கள் ஒத்துழைக்குமாறு அக்ரி, டிஸ் அக்ரி நிபந்தனைகள் இருந்தன. இதன் காரணமாக பலரும் பயந்துபோய் டெலிகிராம்,சிக்னல் என மாறிவிட்டு பிறகு மீண்டும் வாட்ஸ்அப்புக்கே வந்தனர். ஏன் இப்படி? வாட்ஸ் அப் அளவுக்கு மேற்சொன்ன ஆப்கள் சமர்த்து கிடையாது. நீதிமன்றத்தில் வாட்ஸ்அப்பும் நாங்கள் யாரையும் புதிய கொள்கைக்கு கட்டாயப்படுத்தவில்லை என சம்பிரதாயமாக பேசி பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. ட்ரோன் தாக்குதல் ஜம்முவில் இரண்டு விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை நடத்தியது. இந்த வகையில் தாக்குதல் நடப்பது இதுவே முதல்முறை. முதல் மாற்றுப்பாலின மருத்துவர் மருத்துவர் அக்சா ஷேக் என்பவர் முதல் மாற்றுப்பா

2021 இல் புழங்கி புதிய சொற்கள், வார்த்தைகள்!

படம்
cheugy குறிப்பிட்ட விஷயத்தை  அது அடிப்படையானது என்றாலும் புரிய வைக்க மெனக்கெடுவது. இது நவீனகால நாகரிகமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்த வார்த்தை டிக்டாக்கிலிருந்து வந்தது. ஜென் இசட் தலைமுறையினர் மில்லினியலை சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை பயன்படுத்தினர்.  என்எஃப்டி  NFT இது நான் ஃபன்ஜிபிள் டோக்கன். இப்போது உலகம் முழுக்க பரவிவரும் முறை இது. விர்ச்சுவலாக ஒருவர் நிர்வகிக்கும் சொத்து. இதனை ஒருவர் காசு கொடுத்து வாங்கலாம் விற்கலாம். இதனை காப்பி செய்ய முடியாது. சினிமா, பாடல், புகைப்படம் எதனையும் இந்த முறையில் டோக்கனாக மாற்றலாம். இது ஒரு டிஜிட்டல் டோக்கன் என்று புரிந்துகொள்ளுங்களேன்.  critical race theory மாணவர்கள் இனம், இனவெறி பற்றி படிப்பதைக் குறிக்கிறது. அறிவுசார்ந்த குழு, இனவெறி பற்றி அதன் விளைவுகளைப் பற்றி விவரிப்பதையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.  ரீஜென்சிகோர் Regencycore நெட்பிளிக்ஸின் பிரிட்ஜெர்டன் என்ற தொடரில் 19ஆம் நூற்றாண்டு புத்திசாலிகள், கவர்ச்சியான பெண்களைக் காட்டுவார்கள். அவர்கள் பின்பற்றிய நாகரிக விஷயங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.  murraya  ஆஸ்திரேலியா, ஆசியாவின் பருவகால மர