2021 இல் புழங்கி புதிய சொற்கள், வார்த்தைகள்!









cheugy

குறிப்பிட்ட விஷயத்தை  அது அடிப்படையானது என்றாலும் புரிய வைக்க மெனக்கெடுவது. இது நவீனகால நாகரிகமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்த வார்த்தை டிக்டாக்கிலிருந்து வந்தது. ஜென் இசட் தலைமுறையினர் மில்லினியலை சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை பயன்படுத்தினர். 

என்எஃப்டி  NFT

இது நான் ஃபன்ஜிபிள் டோக்கன். இப்போது உலகம் முழுக்க பரவிவரும் முறை இது. விர்ச்சுவலாக ஒருவர் நிர்வகிக்கும் சொத்து. இதனை ஒருவர் காசு கொடுத்து வாங்கலாம் விற்கலாம். இதனை காப்பி செய்ய முடியாது. சினிமா, பாடல், புகைப்படம் எதனையும் இந்த முறையில் டோக்கனாக மாற்றலாம். இது ஒரு டிஜிட்டல் டோக்கன் என்று புரிந்துகொள்ளுங்களேன். 

critical race theory

மாணவர்கள் இனம், இனவெறி பற்றி படிப்பதைக் குறிக்கிறது. அறிவுசார்ந்த குழு, இனவெறி பற்றி அதன் விளைவுகளைப் பற்றி விவரிப்பதையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம். 

ரீஜென்சிகோர் Regencycore

நெட்பிளிக்ஸின் பிரிட்ஜெர்டன் என்ற தொடரில் 19ஆம் நூற்றாண்டு புத்திசாலிகள், கவர்ச்சியான பெண்களைக் காட்டுவார்கள். அவர்கள் பின்பற்றிய நாகரிக விஷயங்கள் என்று புரிந்துகொள்ளலாம். 

murraya 

ஆஸ்திரேலியா, ஆசியாவின் பருவகால மரங்கள் என்று கூறலாம். 

1925ஆம் ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர் ஸைலா அவான்ட் கார்டே வென்றது இந்த வார்த்தையை சொல்லித்தான். 

பிரேக்த்ரோ breakthrough

கோவிட் பஞ்சாயத்துகளை தடுப்பூசி போட்டு முடித்து வைத்ததை இப்படி குறிப்பிடுகிறார்கள். 

மெட்டாவர்ஸ் 

மார்க் இதைச்சொல்லித்தான் இந்த ஆண்டை கிறுக்கு பிடிக்க வைத்தார். விர்ச்சுவலாக அனைத்து சூழல்களும் அமைக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் நிறுவனம் தனது எதிர்காலம் விர்ச்சுவல் உலகை நோக்கித்தான் என்று சொல்லி தாய் நிறுவனத்தை மெட்டா என பெயர் மாற்றிக்கொண்டது. குங்குமத்தின் அன்னம் அரசு தொடங்கி, விகடனின் கார்க்கி வரை மெட்டாவர்ஸ் பற்றி கட்டுரை எழுதி மக்களுக்கு விளக்கினார்கள். 

செகண்ட் ஜென்டில்மேன் second gentleman

ஷங்கர் அடுத்து எடுக்கும் படத்தின் பெயர் கிடையாது. அமெரிக்காவில் துணை அதிபரை கரம்பிடித்தவரை சொல்லுவதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதாவது இந்திய.... வேண்டாம் கமலா ஹாரிஸின் கணவர் டக் எம் ஹாப் என்பவர்தான் இரண்டாவது ஜென்டில்மேன் என உலகம் குறிப்பிடுகிறது. 

ஈகோ ஆன்க்சைட்டி eco anxiety

உலகத்திற்கு ஏதாச்சும் ஆயிருமே என முகத்திற்கு மாஸ்க் கூட போடாமல் கவலைப்பட்டு பதறி சிதறுவதை இயற்கை பற்றிய பதற்றம் என மொழிபெயர்க்கலாம். 

ஹாட் வேக்ஸ் சம்மர் hot vax summer

தடுப்பூசி போட்டுக்கொண்டு தனியாக வாழும் தனியர்களைக் குறிக்கும் வார்த்தை. காதல் வளர்க்க  ஒன்றாக சந்திக்க முடியாவிட்டாலும் விர்ச்சுவல் உலகில் ஒன்றாக குடும்பம் நடத்துபவர்கள் இவர்கள்தான். 

ஹைபிரிட் hybrid

வீட்டிலிருந்து ஆபீஸ்வேலை, ஆபீஸ் வந்தால் சொந்த வேலை.. ச்சே உண்மையைச் சொல்லிவிட்டோமே... ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தும், அலுவலகத்திற்கும் வந்து மீதி வேலைகளையும் செய்வதை ஹைபிரிட் எனலாம். 

டிபிளாட்ஃபார்ம்  deplatform

விளம்பரத்தில் வந்த பொண்ணு பொட்டு வைக்கவில்லை. முந்தானையை இடுப்பில் சொருக வில்லை என துணிக்கம்பெனியை எதிர்க்கிறோம். துணி வாங்கமாட்டோம் என சில அரைமென்டல்கள் கூச்சல் போட்டதை பார்த்திருப்போம். குறிப்பிட்ட விஷயங்களை அல்லது அதனை வெளியிடும் கம்பெனியையை விலக்கிவைக்கிறோம், அன்னம் தண்ணி புழங்க மாட்டோம் என்று சொல்வதை இப்படி கூறுகிறார்கள். 





 


டைம் இதழ் டிச.27


கருத்துகள்