2021 ஆம் ஆண்டு முதன்முறையாக நடந்த விஷயங்களின் அணிவகுப்பு!

முதல் பெண் சாதனையாளர் ஃபால்குனி நாயர் நைகா என்ற கம்பெனியை அறிந்திருப்பீர்கள். அதனுடைய உடைகளுக்காக அல்ல. கத்ரீனா கைப் அதில் நிறைய முதலீடு செய்திருக்கிறார் என தந்தி முதல் தினகரன் வரை எழுதினார்கள். அந்த நிறுவனத்தின் இயக்குநர் பெண்தான். இது இந்தியாவில் ஆச்சரியமான செய்தி. ஃபால்குனி நாயர். தன்னைத்தானே செதுக்கி இன்று ஏராளமான முதலீடுகளைப் பெற்று கோடீஸ்வரி ஆகிவிட்டார். மென்சா பிராண்ட்ஸ் இந்த நிறுவனத்தை மிந்த்ராவில் வேலை செய்த முன்னாள் இயக்குநர் ஆனந்த் நாராயண் தொடங்கி சிறப்பாக வளர்த்தெடுத்திருக்கிறார். ஸ்டார்ட்அப்பாக தொடங்கி ஆறு மாத த்தில் யுனிகார்ன் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. தன்பாலின நீதிபதி சௌரப் கிர்பால் ஒரினச்சேர்க்கையாளர். அடுத்து அவர் படித்த படிப்பிற்கு நீதிபதியாக பதவிக்கு வரவிருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வேலை கொடுக்கவிருக்கிறார்கள். இந்த பதவி நியமனம் நடந்தால் மாற்றுப்பாலினத்தவர்களின் வரலாற்றில் முக்கியமான வெற்றி என்று சொல்லலாம். முதல் மாசுபாட்டு கட்டுப்பாட்டு கருவி டெல்லியில் கன்னாட்பிளேசில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஸ்மோக் டவர் உருவாக்கப்பட்டது. தலைநகரில் மாசுபாடு எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட, மாநில அரசு இத்தகையை முடிவை எடுத்தது. பயன் என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அரசு இதை செய்து இந்தியாவில் முதல்முறை என்ற பெயரை தட்டிச்சென்றுவிட்டது. எல்லாம் ஆம் ஆத்மிக்காகத்தானே? போர்ப்படை விமானி பாவனா காந்த் குடியரசு தின பரேடில் போர்ப்படை விமானி பாவனா காந்த்தை உலகம் பார்த்தது. இந்த வகையில் இப்படி அனுமதி பெற்று விமானியாகி சாதனை படைத்த பெண் இவர்தான். மாற்றுத்திறனாளிகளும் வண்டி ஓட்டலாம் கட்டிப்பள்ளி சிவ்பால் உயரம் குறைவானர். வயது 42. இவருக்கு வாகனம் ஓட்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர், தன்னைப் போல் உள்ளவர்களுக்கு உதவ வாகனம் ஓட்டும் பள்ளி ஒன்றைத் தொடங்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

கருத்துகள்