டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா?
டிஎன்ஏ சோதனை மூலம் தடகள வீரரை கண்டறிய முடியுமா?
2008ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் அட்லஸ் ஜெனடிக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர், டிஎன்ஏ மூலம் குழந்தைகள் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களாக ஆவார்களா, இல்லையா என்பதை தங்களால் கண்டுபிடித்துச் சொல்லமுடியும் என்று கூறியிருந்தார். இக்கட்டுரை வெளியானதற்கு பிறகு, உலகமே பரபரப்பானது.
அப்படியும் இருக்குமோ என்று பலரும் டிஎன்ஏ எடுத்து ஒரே இரவில் தங்கள் குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக்கி விட துடித்தனர். குழந்தைகளுக்கு உடனே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சோதித்தால்தான் பள்ளி, கல்லூரி முடியும் முன்னர் நீங்கள் அவர்களை விளையாட்டு வீரர்களாக்க முடியும் என்று அக்கறையும் பயமுறுத்தலும் கூட கட்டுரையில் இருந்தது. 2015இல் வெளியான ஸ்போர்ட்ஸ் ஜர்னல் மெடிசின் இதழில், மரபணுக்கள் விளையாட்டு வீரர்களின் திறனில் எந்த பங்கும் வகிப்பதில்லை என்று கூறப்பட்டது. இந்நிறுவனம் ஆக்ட்என்3 என்ற மரபணு சோதனை மூலம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண முடியும் என கூறியது.
விளையாட்டு வீரர்களின் உடலில் 9,900 ஆயிரம் பல்வேறு வகையான வேறுபாடுகளைக் கொண்ட மரபணுக்கள், அவர்களின் உயரத்தை தீர்மானிக்க உதவுகின்றன. இப்படி மரபணுக்கள் செய்யும் மாற்றங்களை டேவிட் எழுதிய தி ஸ்போர்ட்ஸ் ஜீன்(David Epstein’s The Sports Gene ) நூல் விளக்குகிறது. 2013ஆம் ஆண்டு 30ஆக இருந்த டிஎன்ஏ சோதனைகள் 2019இல் 70ஆக அதிகரித்துள்ளன. ஒருவரின் விளையாட்டுத்திறனில் உள்ள மரபணுக்களின் பங்கு பற்றி வெளியான அறிவியல் ஆராய்ச்சிகளே இதற்கு காரணம். இதுதொடர்பாக ஐந்து ஒலிம்பிக் வீரர்களோடு, 500 பேர்களின் தகவல்களை பொருத்திப் பார்த்து ஆய்வு செய்தனர். இதில் 48 பேர்களின் மரபணுக்களின் ஆற்றல் ஒலிம்பிக் வீரர்களின் ஆற்றலை விட அதிகமாக இருந்தது. இந்த ஆய்வறிக்கை, இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ஸ்போர்ட்ஸ் சைகாலஜி அண்ட் பர்பாமன்ஸ் இதழில் வெளியானது. ஒலிம்பிக்கில் வென்ற வீரர்கள் டிஎன்ஏ சோதனைகள் செய்யாமலே தங்களுக்குள் உள்ள திறனை அறிந்து முயன்று சாதனை படைத்தவர்கள்.
''உங்களுடைய குழந்தை வேகமாக ஓடுவானா என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு தேவை டிஎன்ஏ சோதனை அல்ல. ஸ்டாப்வாட்ச்தான். அதனுடன் மைதானத்திற்கு சென்று பிற குழந்தைகளோடு ஓட விட்டு பார்த்தால் முடிவு என்னவென்று தெரிந்துவிடும்'’ என்றார் விளையாட்டு அறிவியலாளர் கார்ல் ஃபோஸ்டர். திறமையும் உழைப்பும் ஒருவரை உயரத்திற்கு கொண்டு செல்வதோடு, சாதனையாளராகவும் மாற்றும் என்பதே நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. மேற்குலகில் நடைபெறும் இந்த ஆராய்ச்சிகளில் மரபணுக்களுக்கும், விளையாட்டுத் திறன்களுக்கும் வலுவான தொடர்பு நிரூபிக்கப்படவில்லை. வருங்காலத்தில் அப்படி ஆதாரங்கள் கிடைத்தால் டிஎன்ஏக்களை சோதனை செய்யும் துறை பெரும் வளர்ச்சி பெறலாம்.
தகவல்
outside
https://www.outsideonline.com/2420217/DNA-genetic-testing-olympic-athletes-study?utm_source=pocket&utm_medium=email&utm_campaign=pockethits#close
கருத்துகள்
கருத்துரையிடுக