சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பை கண்டுபிடித்தவர்! - ஜேன் குட்டால்

 









ஜேன் குட்டால்



மாணவர்களுக்கான பத்திரிக்கையில் வேலை செய்தாலும் கூட இயற்கை தொடர்பான ஆய்வாளர் ஜேன் குட்டாலை, யார் அவரு, அவ்வளவு ஃபேமஸா என்று கேட்டு விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்கள். எனவே அவரைப் பற்றி பேசிவிடலாம். 

ஜேன் குட்டால் இளமையில்..

யாரு சாமி இவர்? 

ஜேன் குட்டால் 1934ஆம் ஆண்டு பிறந்தவர். ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி லண்டனில் ஹாம்செட்டில் பிறந்தவரின் பெற்றோர் தொழிலதிபர் - எழுத்தாளர் என வேறுபட்டவர்கள். 

மனிதர்கள் அல்லாத விலங்குகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்பவர் ஜேன். மேலும் மானுடவியல் ஆய்விலும் பேரார்வம் கொண்டவர். சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான ஆய்வில் இவரே முன்னோடி. ஜேனின் சிறுவயதில் அவரது அப்பா மார்டிமோர் ஹெர்பர்ட், சிம்பன்சி பொம்மையை வாங்கிக்கொடுத்தார். அதன் பெயர் ஜூபிலி. அந்த பொம்மை ஜேனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த நாள் தொடங்கி சிம்பன்சி பற்றிய ஏராளமான விஷயங்ளை தேடி படிக்க த் தொடங்கினார். 

தனது இருபத்தாறு வயதில் தான்சானியில் உள்ள காம்பே ஸ்ட்ரீம் தேசியப் பூங்காவில் சிம்பன்சி ஆய்வில் மூழ்கினார். அறுபது ஆண்டுகள் இந்த ஆய்வை செய்தார். இதில்தான் சிம்பன்சிகளின் தகவல்தொடர்பு, அதன் குணம் ஆகியவற்றைப் பற்றி அறிந்திருக்கிறார். 

1960ஆம் ஆண்டு குட்டால் தனது பயணத்தைத் தொடங்கினார். காட்டில் வாழும் சிம்பன்சிகள் பற்றி அவருக்கு ஏதும் தெரியாது. பொதுவாக இவற்றுக்கு அதிக புத்திசாலித்தனம், உணர்ச்சிகரமானவை என்று பொது அம்சங்கள் ஏதும் கிடையாது என்பதால் ஆய்வு செய்வது கடினமானது. ஆனால் ஜேன் இதனையும் சவாலாக எடுத்துக்கொண்டார். தான் பார்க்கும் சிம்பன்சிகளுக்கு தனித்தனியே பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார். விரைவில் நெருக்கமாக வாழத் தொடங்கியபிறகு அவற்றுக்கு தனி இயல்பு, பழக்கவழக்கங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். 




ஆய்வாளர் ஜேன் குட்டால்


மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்குமான தொடர்பை இவர் முன்வைத்து பேசியபோது பலரும் இதனை நம்பவில்லை. ஆனால் மனிதர்கள்தான் கருவிகளை உருவாக்கி பயன்படுத்த முடியும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் சிம்பன்சிகள் வளைக்குள் உள்ள பூச்சிகளைப் பிடிக்க மனிதர்களைப் போலவே குச்சிகளை பயன்படுத்தி வழியை கண்டுபிடித்ததை ஆதாரத்துடன் நிரூபித்தார். 

இவரது ஆராய்ச்சி காரணமாக அதுவரை ஆய்வகத்தில் உட்கார்ந்து கண்டுபிடித்த ஆய்வுக்கொள்கைகளை குப்பைக்கு அனுப்பியது. கூடுதல் விஷயமாக, சிம்பன்சிகளை பாதுகாக்கும் சட்டங்களும் இயற்றப்பட காரணமாக அமைந்தது. இன்று தனது ஜேன் குட்டால் இன்ஸ்டிடியூட் எனும் தன்னார்வ அமைப்பு மூலமாக சிம்பன்சிகளை பாதுகாக்க பல்வேறு பிரசாரங்களை செயல்பாடுகளை செய்து வருகிறார். இதன் குளோபல் யூத் புரோகிராம், ரூட்ஸ் அண்ட் ஷூட்ஸ் ஆகிய திட்டங்கள் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன.  ஐ.நாஅமைப்பால் அமைதியின் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அறிவியல் அமைப்புகளில் ஜேன் குட்டால் என்பவர், மிகவும் மதிக்கப்படும் ஆய்வாளர் ஆவார். 

டெல் மீ வொய் இதழ் 

கருத்துகள்