காணாமல் போன மனைவியை தேடும் கணவன்! - புஷ்பக விமானம் - தெலுங்கு

 





புஷ்பக விமானம் - தெலுங்கு



புஷ்பக விமானம்

தமோதர்

ராம் மிர்யாலா

ஆனந்த் தேவர் கொண்டா, கீத் சைனி, ஷான்வி
மேகனா

புஷ்பக விமானம்- தெலுங்கு


அரசு பள்ளி ஆசிரியர், இளைஞர். இவருக்கு கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயம் செயகிறார்கள். அங்குதான் கல்யாணம் நடக்கிறது. இவரும் சங்கோஜமாக பெண்ணிடம் பேசுகிறார். அவரும் தயக்கத்துடன் இவருடன் பேசுகிறார். கல்யாணம் ஆன பிறகு ஹைதராபாத் வருகிறார்கள். இங்கு வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே ஆசிரியரின் மனைவி காணாமல் போகிறார். இதைப் பற்றி பிறரிடம் சொன்னால், அவமானம் என நாயகன் தானே தேடத் தொடங்குகிறார். மிக நெருக்கமான நண்பனிடம் இதைப்பற்றி சொல்லுகிறார். 

புதிதாக மணமான ஜோடி என்பதால் அவர்களைப் பார்க்க வரும் பிற ஆசிரியர்கள் என அனைவரையுமே நாயகன் சமாளிக்க போலி மனைவியை ஏற்பாடு செய்கிறார். இதெல்லாம் ஒரு கட்டம்தான். பிறகு, அவரின் மனைவி தலையில் அடிபட்டு இறந்துபோனார் என்ற செய்தி டிவியில் வர அனைத்துமே மாறுகிறது. எஸ் ஐ ரங்கம் என்ற போலீஸ்காரர், தொடக்கம் முதலே வழக்கை நாயகன்தான் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்ற கோணத்தில் விசாரிக்கிறார். இதனால் நாயகன் செய்த கௌரவமான வாழ்க்கை என்ற அனைத்து போலி நாடகங்களும் வெளியே வருகிறது. அவனைச் சார்ந்த அனைவருமே பாதிக்கப்பட, உண்மையில் அவனது மனைவியை கொன்றது யார் என்பதை அவனே கண்டுபிடிப்பதுதான் கதை. 

மா ஆவிட லேச்சி போயிந்தி... 


ஆனந்த் தேவரகொண்டாவிற்கு இது முக்கியமான படம். கல்யாண சந்தோஷத்தில் மிதப்பதும்,. அவசரப்பட்டு கேட்ட ஒரு கேள்வியில் கல்யாண வாழ்க்கை சிக்கலுக்குள்ளாவதும், பிறகு அதனை நினைத்து புழுங்குவதும் என சிறப்பாக நடித்திருக்கிறார். சாதாரண வாழ்க்கை நடத்தும் ஒருவராக படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் படம் சிறப்பாகவே இருக்கிறது. படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது நாயகனின் நண்பரும், குறும்பட நடிகையும்தான்(ரேகா).

ராம் மிர்யாலாவின் பாடல்கள் அனைத்துமே காட்சிகளுக்கானவை. ரேகா ஆடும் கிருஷ்ணர் பாடல் பிரமாதமாக உள்ளது. மேலும் கைலாஸ் கர் பாடியுள்ள ஆஹா... பாடல் அவல நகைச்சுவையின் தொகுப்பாக உள்ளது. மார்க் கே ராபினின் பின்னணி இசை, படத்தை உயிரோட்டமாக பார்க்க உதவுகிறது. 

த்ரில்லர் படம்தான் ஆனால் அதில் நகைச்சுவையை சிறப்பாக தொகுத்திருக்கிறார்கள். அதனால்தான் படத்தை ரசித்தபடி பார்க்கமுடிகிறது. 

 



கருத்துகள்