பாயக் காத்திருக்கும் ஓநாய் - அப்பாஸ் கியாரோஸ்தமி
பாயக் காத்திருக்கும் ஓநாய் அப்பாஸ் கியாரோஸ்தமி மொழிபெயர்ப்பு மோகனரங்கன் திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்தமி எழுதியுள்ள கவிதை நூல். நூலை தமிழில் மோகனரங்கன் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பலவும் தனிமை, அடையாள சிக்கல், காலம், விரக்தி, அன்பு, பிரிவு என பல்வேறு உணர்வுகளை மிகச்சிறிய சொற்களில் கூறமுயன்றுள்ளன. வாசிக்கும்போது உங்களுக்கு அவை சிறந்த சொற்கள் என நம்பமுடியும் அளவுக்கு கவிதைகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன. நூலை வெளியிட்ட பதிப்பகம் கவிதைகளை தொடர் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. நல்ல முயற்சி. சிறப்பான மொழிபெயர்ப்பு காரணமாக கவிதைகள் சிறிய சொற்களிலும் கூர்மை மழுங்காமல் உள்ளன. அவை சொல்லவரும் பொருளை உறுதியாக உரைக்கின்றன 'சொர்க்கத்தை சென்றடைய ஒருவர் நடக்கவேண்டும் நரகத்தின் பாதையில்' என்ற கவிதையை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டலாம். இயற்கை அழிவது பற்றிய அக்கறை குரலை எழுப்பும் கவிதைகள் உள்ளன. பிரிவை சொல்லும் கவிதைகளில் 'நின்றுபோனது கடிகாரம்' என்ற கவிதை வரிகளில் இருந்து மீளவே முடியவில்லை. இனி எப்போது சந்திப்போம் என ஆண் கேட்கிறான். அவள், இனி எப்போதுமி...