இடுகைகள்

தாவோ தே ஜிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்

படம்
 தாவோ தே ஜிங் லாவோட்சு தமிழில் சந்தியா நடராஜன்  159 பக்கங்கள் இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது.  தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது.  சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிபெயர்ப்பு பாடலைப் பட