இடுகைகள்

டீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீ இசம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு

படம்
  டீ இசம் நூல், தேநீர் அருந்துவதில் உள்ள விழிப்புணர்வை பற்றி பேசுகிறது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அகாகுரா, மேற்கு நாட்டினருக்கு தேநீர் அருந்துவது பற்றிய கலாசாரத்தை பற்றி விளக்கிப் பேசுகிறார். ஜப்பான் நாட்டில் இன்று வரை டீ செரிமொனி முக்கியமானதாக கடைபிடிக்கப்படுகிறது.  தேநீர் அருந்துவதை ஜென், தாவோயிசம் ஆகிய மதங்கள் எப்படி வளர்த்தெடுத்தன என்பதை வரலாற்று கண்ணோட்டத்தில் சான்றுகளோடு அகாகுரா நூலில் விளக்கியுள்ளார். இந்த நூலை படித்தபிறகு நீங்கள் தேநீர் குடிப்பதை மனமார்ந்து விழிப்புணர்வோடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஜென், தாவோயிச மடாலயங்களில் தேநீர் அருந்துவது, முக்கியமான தியான சடங்குகளில் ஒன்று.  பத்திரிகையாளர் த. சக்திவேல் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம். அவரது நட்பு மற்றும் ஆதரவில்தான், நான் ஏராளமான தேநீர் கடைகளுக்கு சென்று பல்வேறு விதமான தேநீரை சுவைக்க முடிந்தது.  நூலை வாசிக்க க்ளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B0CHFJ22QQ

தேநீர் தேசத்தில் மக்களை காபி குடிக்க வைக்க கஃபே திறக்கும் தொழிலதிபர்! - சிவம் சாகி

படம்
  ப்ளூ டோகாய் கஃபே சிவம் சாகி, நம்ரதா ஆஸ்தானா, மேட் சித்தரஞ்சன் ப்ளூ டோகாய் காபி சிவம் சாகி 32 துணை நிறுவனர், செயல் அதிகாரி, ப்ளூ டோகாய் இந்தியாவில் டீ குடிப்பவர்களே அதிகம். குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டுமே காபி என குரல் கொடுத்து காபி குடிப்பார்கள். இப்படியான சிக்கல் உள்ள தேசத்தில் காபிக்காக தனி கஃபேக்களை தொடங்கி நடத்துவதை யோசித்துப் பாருங்கள். அதை சிவம் சாகி தனது உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் சாதித்திருக்கிறார். டெல்லி, சண்டிகர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் அறுபது கஃபேக்களை தொடங்கி தனது காபியை விற்பதே சாகியின் லட்சியம். 2024ஆம் ஆண்டு, 130 கஃபக்ககளை திறக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உழைத்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாகி, தனது நண்பர்கள் மேன் சித்தரஞ்சன், நம்ரதா ஆஸ்தானா ஆகியோருடன் இணைந்து 2015ஆம்ஆண்டு ப்ளூ டோகாய் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், அமேஸான் வலைத்தளத்தில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் காபி அல்லாமல் செயல்படும் பெரிய நிறுவனம் ப்ளூ டோகாய்தான். இதை நமக்கு சொன்னது கூட சிவம் சாகிதான். இப்படி தனக்குத்தானே ஜெயிப்போம்டா என்று சொல்லி காபி

டீ பேகை அழுத்திப் பிழிந்து குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி க்ரீன் டீ குடிக்கும்போது டீ பேக்கை சிலர் மெதுவாக நனைத்து எடுக்கிறார்கள். சிலர் அதனை கையில் வைத்து பிழிகிறார்கள். இது ஆபத்தானதா? துணியைக்கூட இறுக்கமாக வைத்து பிழியாதீர்கள். ஆயுள் குறையும் என துணிக்கம்பெனி சொல்கிறார்கள். அதற்காக வேலைக்காரர்கள் என்ன இலவம் பஞ்சையா வைத்து தேய்த்து அழுக்கை நீக்குகிறார்கள். அடித்து பிழிகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன? டீ பேக்கை அப்படி விரல்களால் கசக்கி பிழிந்தால் என்னாகும் தெரியுமா? அதிலுள்ள டானின் எனும் மஞ்சள் நிற அமிலம் டீயில் அதிகம் கலக்கும். கசப்புச்சுவை அதிகரிக்கும். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்காது. பயப்படாதீர்கள். நன்றி: பிபிசி 

ஆயுள் அதிகரிக்க சில டிப்ஸ்கள்!

படம்
ஆயுளை அதிகரிக்கும் பழக்கங்கள் உடனே ஆபீஸ் போவதை நிறுத்திவிடலாமா என்று கேட்காதீர்கள். அதை நிறுத்தினால் சோறு கிடைக்காது. அதை தவிர்த்து பிற விஷயங்களை செய்யவேண்டியதைத்தான் சொல்லுகிறோம். கேளுங்கள். வியர்வைக் குளியல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட குளியல் அறையைத்தான் மேன்ஷனில் கட்டுகிறார்கள். துண்டைக் கதவில் போட்டுவிட்டு ஜட்டியுடன் அப்படியே உட்கார்ந்துவிடுங்கள். குபீரென வெப்பத்தில் வியர்க்கும். ஆம் . பிளான் அதுதான். நன்கு வியர்த்தால் உடலின் அழுக்குகள் கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஹமாம் போடாமலேயே குளிக்கலாம். ஆயுளும் அதிகரிக்கும் என ஜமா இன்டர்னல் மெடிசின் இதழ் 2015 இல் அறிக்கை வெளியிட்டது. ஏறத்தாழ 2000 பின்லாந்து ஆட்களிடம் செய்த ஆய்வு அறிக்கை முடிவு இது. வியர்வையால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எளிய உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள். தியானம் வேதாத்ரி தொடங்கி கைலாசா நித்தியானந்தா வரையிலும் சொல்வது இந்த ஒன்றைத்தான். நமக்கு கண்ணை மூடினால் தியானத்தை தவிர அத்தனையும் வருகிறது என்பதால் இதை எங்கே சென்று முறையிட. விடுங்கள். அப்படி செய்தால், சிறிதுநேரம் மூளை, மனது ஆகியவற்றின் கொதிப்புக

காபி குடித்தால் உடலில் நீர்ச்சுருக்கம் ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி  டீ, காபி குடித்தால் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுமா? சேட்டன் கடை டீ குடித்தாலும் சரி, சாய் கிங்ஸில் போய் டெட்ரா பேக்கில் டீ வாங்கி எலைட்டாக குடித்தாலும் சரி. அதைக்குடித்த சிறிது நேரத்தில் மடியிலிருந்து கனம் இறங்குவதைப் போலத் தோன்றும். தனித்தமிழில் சிறிது நேரம் காத்திருங்கள் தோழா. சிறுநீர் சிந்திவிட்டு வருகிறேன் என்று செல்லவேண்டி வரும். காரணம். அதிலுள்ள காஃபீன். இதனால்தான் உயர்தர சுவையில் கோத்தாஸ் காபி, லியோ காபி குடித்தாலும் மூத்திரம் பிய்த்துக்கொண்டு போகிறது. எனவே டீ குடியுங்கள். கூடவே அம்மா குடிநீரையும் குடியுங்கள். விரைவில் உங்களுக்கே தெரிந்துவிடும் எது சிறந்தது என்று. நன்றி - பிபிசி

டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

படம்
மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை. டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி. டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை. நன்றி: டவுன் டு எர்த்

டீ குடித்தால் கழிவறை நோக்கி ஒடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காபி, டீ குடித்தால் உடனே மலம் கழிக்கத் தோன்றுவது ஏன்? உடனே பீதியாகாதீர்கள். எனக்குக்கூட என் அம்மா வைக்கும் ரசத்தைச் சாப்பிட்ட உடனே பாத்ரூமுக்கு ஓடுவேன். அது குடும்பத்தில் நடக்கும் பழிக்குப்பழி சமாச்சாரம். அதை விடுங்கள். டீ, காபியில் ஏன் அப்படி நடக்கிறது?  காரணம் அதிலுள்ள ஊக்கமூட்டிகள் குடலை சற்று நெகிழ வைப்பதுதான். இதனால் உலகிலுள்ள 60 சதவீதம் பேர் காபியை ஆசையோடு குடித்துவிட்டு தலைதெறிக்கும் வேகத்தில் பாத்ரூமில் அடைக்கலமாகிறார்கள். இது தவிர்க்க முடியாது. இதுவே சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும் .இதனை ஆயுர்வேத த்தில் கழிச்சல் நோய் என்பார்கள். இதனை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். எனவே, டீ, காபியை குறைத்துக்கொண்டால் மலம் வேகமாக வெளியேறும் வேகத்தைக் குறைக்கலாம். உடலிலுள்ள நீரும் இதன் காரணமாக வேகமாக வெளியேறும் என்பதால் கவனம் தேவை. நன்றி: பிபிசி

டீ குடித்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் என்னாகும்? ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய டஸ்ட் டீயையே இன்றுவரை ரசித்து குடித்து பழகிவிட்டோம். இதிலும் நிறைய வகைகள் உண்டு. இதில் பயன்படுத்தும் பூச்சிமருந்துகளின் பாதிப்பும் நம் உடலில் தாக்கம் ஏற்படுத்துகிறது. விஷயம் டீ பாதிப்பு தருமா? என்றால் பெரியளவு கிடையாது. டீயில் பாலிபெனல் எனும் ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. இந்தியர்கள், சீனர்கள், ஆங்கிலேயர்கள் அதிகம் டீ அருந்தும் வழக்கம் கொண்டவர்கள். ஒரு நாளுக்கு மூன்று கப் என்பது சரியான அளவு. இந்த அளவு ஆன்டி ஆக்சிடன்ஸ் மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு கப்பில் 40 கிராம் காபீன் டீயில் இருக்கிறது. இது காபியை விட பாதிதான். அமெரிக்காவில் உள்ள பெண் ஒருவர் டீ குடித்து தன் பற்களை இழந்தார். காரணம், பதினேழு ஆண்டுகளில் 150 டீ பேக்குகளை ஐஸ் டீயாக போட்டு குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். நன்றி: பிபிசி