டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!




Photo: Getty Images



மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன.

டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை.

டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி.


டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை.

நன்றி: டவுன் டு எர்த்