மலம் தின்னும் மனித மிருகம் - ஆல்பிரெட் ஃபிஷ் - அசுரகுலம்




Orphanage
ஆதரவற்றோர் காப்பகம்



அசுர குலம்!


ஆல்பிரெட் ஃபிஷ்


1934 ஆம் ஆண்டு ஆல்பிரெட் எழுதிய கடிதம்தான் அவர் செய்த விஷயங்களுக்கு அவரே கொடுத்த சுய வாக்குமூலம்.


அன்புள்ள திருமதி பட்,  1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் உன்னை மதிய உணவுக்காக அழைத்தேன். அப்போது உனது மகள் என் மடியில் ஏறி உட்கார்ந்தாள். எனக்கு உதட்டில் முத்தம் கொடுத்தாள். அப்போதே அவளைக் கொன்று தின்பது என முடிவெடுத்துவிட்டேன் என செல்லும் கடிதம் யாரையும் மிரட்டும்தானே.

ஆல்பிரெட் ஃபிஷ் அப்படித்தான் கடிதம் எழுதி, கொன்று தின்ற மகளின் தாய்க்கு அனுப்பி வைத்தார். ஹாமில்டன் ஹோவர்டு பார்த்தால் யாருக்குமே எந்த சந்தேகமும் வராத ஆள்தான். ஆனால் உள்ளுக்குள் ரத்த வெறி பிடித்த ஆள்.

இதே கடிதம் இறுதியாக, கிரேசி பட்டை முழுதாக தின்று முடிக்க எனக்கு ஏழு நாட்கள் ஆனது. அவளது புட்டத்தை மைக்ரோவேவ் ஓவனில் சமைத்து தின்றேன. எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமா? என்ன இன்னும் கொஞ்சம் நிதானமாக இருந்திருந்தால் அவளை கற்பழித்துவிட்டு கொன்றிருக்கலாம். கன்னி கழியாமல் கொல்ல வேண்டியதாகி விட்டது என்று கடிதம் முடியும்.

Grace Budd Murder House
கிரேசி பட் கொலை செய்யப்பட்ட வீடு!





ஹாமில்டன் ஹோவர்டு, சாம்பல் மனிதன், ப்ரூக்ளின் காட்டேரி என்று பட்டப்பெயர் உண்டு. அதற்கு நியாயம் செய்யும் செயல்களையும் ஆல்பிரெட் செய்திருக்கிறார்.

இவரது குடும்பம் முழுவதுமே மனநிலை சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள்தான். அப்பா சில மேனியாக்களை மனதில் வைத்திருந்தார். அம்மாவுக்கு மாயக் காட்சிகள் பிரச்னை உண்டு. சகோதர ர் மனநலக் காப்பகத்தில் இருந்தார். இதற்குமேல் நான் இவரது குடும்பத்தை என்ன சொல்வது?

இவரது தந்தைக்கு எழுபத்தைந்து வயது. ஆல்பிரெட் பிறக்கும்போது தந்தைக்கு இந்த வயது என்றால் அவர் எப்படி இளைஞராகும்போது உயிரோடு இருப்பார். வறுமை பிரச்னையால் அம்மா, ஆல்பிரெட்டை ஆதரவற்றோர் காப்பகத்தில் விட்டார். அங்குதான் அனைத்து சிக்கல்களும் தொடங்கின.

அங்கு வார்டனாக இருந்தவர் செல்வராகவன் பட கதாபாத்திரம் போல. அவரும் மாணவர்களை அடிப்பார். ரசிப்பார். பிற மாணவர்களையும் அடித்துக்கொள்ளச் செய்து ரசிப்பார். ஆல்பிரெட் மெல்ல வலியை ரசிக்கத் தொடங்கினார். பின்னாளில் அம்மா பொருளாதார ரீதியாக வலிமையான பின்னர் ஆல்பிரெட்டை தன்னோடு வைத்துக்கொண்டார்.

அப்போது தந்தி அனுப்பும் இளைஞரோடு தொடர்பு கிடைத்தது. அப்போது ஆல்பிரெட்டுக்கு மலம் தின்னும், சிறுநீர் குடிக்கும் பழக்கம் தொற்றியது.  மற்றவர்களின் கழிவுகளை தின்பது என புரிந்துகொள்ளுங்கள். பின் தன்னை கொடூரமாக இம்சித்துக் கொள்வது அவருக்குப் பிடிக்கும்.

போலீசில் அவர் மாட்டியபோது செய்த சோதனையில் அவரது வயிற்றில் குடலில் நிறைய ஊசிகள் இருந்தன. வலி தரும் மகிழ்ச்சிக்காக இப்படி செய்தாராம். கீட்டன் என்ற நண்பரை பல்வேறு சோதனைகளுக்குப் பயன்படுத்தினார். இறுதியில் அவரை டார்ச்சர் செய்து ஆண்குறியைக் கூட வெட்டியிருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு ஆல்பிரெட்டுக்கு திருமணமாகியது. ஆறு பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் இவர் தன் குழந்தைகளை நேரடியாக சித்திரவதை செய்யவில்லை. ஆனால் பிறரை குறிப்பாக ஆண் குழந்தைகளை கடுமையாக வதைத்து எடுத்தார்.

அப்போது, அவரின் மனநிலையும் வேற லெவலுக்கு மாறியது. இறைச்சியை பச்சையாக சாப்பிட ஆரம்பித்தார். தன் குழந்தைகளுக்கும் அப்படி கொடுத்தார். பின்னர் அவர்களுக்கு சொல்லித்தரும் விளையாட்டுகள் கடும் வக்கிரமாக மாறின. கொலைகளுக்கு காரணமாக கடவுள் தன்னிடம் சிறு பையன்களை சித்திரவதை செய்யக் கூறினார். அதனால் செய்தேன் என்றார்.

பையன்களை வான்டட் விளம்பரத்தில் இருந்து தேர்வு செய்தார். வீட்டு வேலைக்கு ஆட்கள் ரெடி என்று வரும் விளம்பரத்தை தேர்வு செய்து ஃபிராங்க் ஹோவர்டு என்ற பெயரில் போய் ஆட்களை வேலைக்கு எடுத்து வந்து கொல்வதுதான் பிளான். அதில் எதிர்பாராமல் மாட்டியவர் கிரேசி பட்.