நியூஸ் பிட்ஸ்! - மும்பையில் இறந்த சேமிப்பு மன்னர்!
சேமிப்பு மன்னர்!
மும்பையில் ரயில் பாதையில் இறந்துகிடந்த பிச்சைக்காரரிடம் 11.5 லட்சம் ரூபாய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைப் பூர்விகமாக கொண்ட பிராடிசந்த் பன்னாராம்ஜி என்று பெயர் அறியப்பட்டுள்ளார். இவர், நாணயங்களாக 1.75 லட்சமும், வைப்புத் தொகையாக 8.77 லட்சரூபாயும், சேமிப்புக்கணக்கில் 96 ஆயிரம் ரூபாயும் சேமித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
சூழல் போராட்டம்!
உலகமெங்கும் அரசுகளுக்கு எதிரான சூழல் போராட்டம் வெடித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சட்டமறுப்புஇயக்கமாக சூழலியலாளர்கள் தெருக்களில் அமைதியாகக் கூடி போராடி வருகின்றனர். லண்டனில் இருநூறுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
தூய்மையான கங்கை!
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மையான கங்கை திட்டத்தொகை ஐந்து ஆண்டுகளில் 15 மடங்கு உயர்ந்துள்ளது. மத்தியஅரசு 2015-2020 காலகட்டத்தில் தூய்மைப்பணிக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. தற்போது நமாமி கங்கா திட்டத்தொகை 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார் தூய்மை கங்கை திட்ட இயக்குநரான ராஜீவ் ரஞ்சன் மிஷ்ரா.
பாகுபாடு இல்லை!
அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஆசிய அமெரிக்கர்களுக்கு படிக்க இடம் கொடுப்பதில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழ, வழக்குத் தொடரப்பட்டது. தற்போது நீதிமன்றம், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக முதல்வர் லாரன்ஸ் பாகோ, ”இதன் மூலம் எங்களது பன்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.