ஜனநாயகத்தில் சீர்த்திருத்தங்கள் சாத்தியம்தான்! - சேட்டன் பகத்







Image result for gst confusion
இந்தியன் எக்ஸ்பிரஸ்







ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள்!


முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள் எளிதாக நடைபெறாது என்று கூறினார். அவர் அதை என்ன பொருளில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு என்ன காரணம் என யோசித்தால், இந்திய மக்களிடையே அரசு புதிய விஷயங்களை கொண்டு வரும்போது அதனை சந்தேகமாக பார்க்கிறார்கள்.

ஜிஎஸ்டி விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட வரி சீர்திருத்தம் அது. ஆனால் பாஜக காலத்தில் எந்த விழிப்புணர்வுமின்றி அமலானது. இன்றுவரையிலும் வரிவிகிதங்களைப் பற்றி மக்களுக்கும் புரியவில்லை. தொழிலதிபர்களுக்கும் எப்போது வரி கட்டவேண்டும் என்பதை ஆடிட்டர்கள் சொல்லும்போதுதான் புரிந்துகொள்கின்றனர்.

அரவிந்த் சுப்பிரமணியன், சீர்திருத்தங்கள் அமலாக அதிக காலம் எடுப்பதை கருத்தில் கொண்டு மேற்சொன்னது போல கூறியிருக்கலாம். அது உண்மைதான். இங்கு பல்வேறு சிந்தனை அமைப்புகள் உள்ளன. வரி சீர்திருத்தம் என்பது சரி, தவறு, பாதிப்பு என்ன என்பதை முன்னரே அடையாளம் காண இதுபோன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைவரின் குரல்களையும் கேட்க இசைவதுதானே ஜனநாயகமாக இருக்க முடியும். அதுதான் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு சரியான திசையாக இருக்க முடியும். நாம் மாற வேண்டியது, அனைத்து விஷயங்களையும் அதிரடியாக சந்தேகப்படுவதை நிறுத்துவதுதான். சோசலிச தேசமாக இந்தியா இருக்கலாம். ஆனால் நாம் பயணப்பட இன்னும் வெகு தொலைவு காத்திருக்கிறது. இன்னும் நாம் பழங்காலத்திலேயே நிற்க முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளை மக்கள் பெரும் பயத்துடன்தான் பார்க்கின்றனர். இந்த பயம் நீக்கப்படுவது அவசியம்.

தொழில் வளர்ச்சி இல்லாதபோது, நமக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்காது. வருமானமும் இருக்காது. பின்னே எப்படி நாடு வளரும்? இதில் மக்கள் இன்னும் முன்னேற வேண்டியது உள்ளது.


சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.