உணவுக்கான ரேஷன் தேவையா? சேட்டன் பகத்!
Giphy.com |
நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிறது. இதை எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? நிச்சயம் அது உங்கள் கவனத்திலேயே இருக்காது. காரணம், நாம் இன்னும் வறுமை நாடாகவே இருக்கிறோம். உங்களில் வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனாலும் அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறீர்கள்.
அரசு குடிமகன்களுக்கான உணவு, உடை, வாழிடம் கொடுப்பது கடமை. இதில் கூடுதலாக மின்சாரத்தையும் சேர்க்கலாம்தானே? இவற்றை உருவாக்கிக்கொள்ளும் வேலை தந்துவிட்டால் மக்களுக்கு யாரையும் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் பிரச்னை எழுந்தால்தானே தேர்தலில் அரசியல்வாதிகள் வெல்ல முடியும்?
pixabay |
எனவே அவர்கள் வறுமை ஒழிக்க வேலை பெற்றுத்தருவதை விட ரேஷனில் மாதம் அரிசி, காய்கறி, சர்க்கரை என வழங்குவது எளிது. நாமும் இந்த அவலத்தை மனப்பூர்வமாக ஏற்று இந்தியாவை தலைகுனிய வைக்கிறோம்.
அரசு வழங்கும் பொருட்களை பெறும் நிலையில் உள்ள வறுமையான குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. ஆனாலும் நாம் ரேஷன் கார்டிலுள்ள பொருட்களை மனத்தயக்கமின்றி சென்று வாங்குகிறோமே ஏன்? எனக்கு அரசின் இலவசப் பொருட்கள் தேவையில்லை என்று தைரியமாக கூறுவதை எது தடுக்கிறது?
அடுத்தவர்களுடன் போட்டியிடம் மனப்பான்மையா? எனக்குரிய பொருட்கள் அவை என்ற எண்ணமா? எனக்கு புரியவில்லை. சில மாநிலங்களில் பொருட்கள் பணத்திற்கும் சில மாநிலங்களில் முற்றிலும் இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் பற்றாக்குறையாகும் நிதியை அரசு மீண்டும் வரி உயர்தித்தான் பெறும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா? பிறகு ஏழை, வறுமை என்ற விஷயங்களிலிருந்து மக்கள் எப்படி மீண்டு வர முடியும் சொல்லுங்களேன்.
இந்த நொடியில் இடதுசாரிகள் என்னை முதலாளித்துவ கைக்கூலி என கூவலாம். ஆனால் மத்திய மாநில அரசுகளின் கடன் சுமையை நினைத்துப் பாருங்கள். உணர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருபவர்களால், உண்மையில் மக்களின் தேவைகளை தீர்க்க முடியவில்லை. இந்தியாவிற்கான பிரச்னைகள் அமெரிக்காவை விட மாறுபட்டவை. தொழில், கலாசாரம், உணவு என எல்லாவற்றையுமே நான் கூறுகிறேன். நாம் வறுமை என்பதற்கு தீர்வாக, இலவசமான உணவகங்களை அதிக நாட்கள் நம்பியிருக்க முடியாது. அதிலிருந்து மாறுபட்டு சிந்திக்கும் காலம் வந்துவிட்டது.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.